ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

லயன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி

லயன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 32 அணிகள் பங்கு கொண்ட லயன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் (18) கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலை மைதானத்தில் பாண்டிருப்பு யூத் கழக அணிக்கும் கல்முனை ரெபாஸ் அணிக்குமிடையில் நடைபெற்றது.

இப்போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடி கல்முனை ரெபாஸ் அணி லயன்ஸ் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்டத்தின் உதவி ஆளுநர் லயன் ஈ.டபிள்யூ.

ஏ. ஹரிச்சந்து (எம்.ஜே.எப்), பிராந்தியம் 3ன் பிராந்திய தலைவர் கலாநிதி பிறேமசிறி ஹேவாவசம் (பீ.எம்.ஜே.எப்) ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைப்பதையும் அருகில் பிராந்திய தலைவர் லயன் எஸ். தைரியராஜா, வலய தலைவர் லயன் கே. பொன்னம்பலம், கழக தலைவர் லயன் எஸ். சிறிரங்கன், செயலாளர் லயன் ஏ.ஜே.எம். ஹனீபா உட்பட அதிதிகள் நிற்பதையும் காணலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி