ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

விளையாட்டின் மூலம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், சகிப்புத்தன்மை என்பன முக்கிய அம்சமாகும்

விளையாட்டின் மூலம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், சகிப்புத்தன்மை என்பன முக்கிய அம்சமாகும்

நீதவான் என். எம். அப்துல்லா

விளையாட்டின் மூலம் உடல் நல ஆரோக்கியம் பற்றி பேசப்பட்டாலும் தலைமைத்துவக் கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை என்கின்ற முக்கிய அம்சங்களும் இதன் மூலம் கட்டியெழுப்பப்படுவதை எம்மில் அதிகமானோர் கண்டு கொள்வதில்லை என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அல்-ஹாபிஸ் என். எம். அப்துல்லா தெரிவித்தார்.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை மத்தியஸ்தர் சங்கத்தினால் ஏற்பாடு செய்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி அட்டாளைச் சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவரும், விளையாட்டு உத்தியோகத்தருமான எஸ். எல். தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ. எல். ஏ. அkஸ் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஹம்சா சனூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அங்கு நீதவான் அப்துல்லா தொடர்ந்து உரையாற்றுகையில் :-

ஒழுக்கத்துடன் கட்டியெழுப்பப்படாத எந்தவொரு சாதனையாளனின் சாதனையும் நிலைத்து நிற்பதில்லை. மட்டுமல்லாது அது மக்களிடத்தில் நல்லபிப் பிராயத்தினையும் பெறுவதுமில்லை. விளையாட்டுடன் இணைந்ததாக கல்விச் செயற்பாடுகள் அமைய வேண்டும். அப்போது தான் அங்கு ஆளுமை, தலைமைத்துவக் கட்டுப்பாடு, மற்றவர்களுக்கு மதிப்பளித்தல் வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, கூட்டுப் பொறுப்பு, உடல் நல ஆரோக்கியம் போன்ற மனித வாழ்க்கைக்கு இன்றி யமையாத பல பண்பாடுகளும், செயற் பாடுகளும் வளர்க்கப்படுகின்றன. இங்கு போட்டி என்ற எண்ணப்பாடு இறுதியாகவே அமைய வேண்டும்.

எனவே ஆளுமையுடன் ஒழுக்கமும் நிறைந்த ஒரு மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வெறுமனே கல்வி என்ற ஒரு துறையினை மட்டும் மனித குலம் நாடிச் செல்வதனால் பல்வேறு பட்ட விபரீதங்களையும், அநாகரீக செயற்பாடுகளும் தோற்றம் பெற்று வரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். கல்வியுடன் விளையாட்டு மற்றும் மார்க்க ரீதியான ஈடுபாடுகள் கொண்டவர் களாக மாணவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாகரீகமுள்ள, சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய மனித சமுதாயத்தை காண முடியும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி