ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

அமைச்சர் மீது செருப்பு வீச்சு

அமைச்சர் மீது செருப்பு வீச்சு

ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிமாந்திரா பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கானூலில் வக்கீல்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மந்திரி வெங்கடேசன் அங்கு வந்தார். அவரை தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். உங்கள் பதவியை இராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார்கள். இந்த நிலையில் சிலர் மந்திரி வெங்கடேஷ் மீது செருப்பு வீசினார்கள். இதனால் மந்திரி ஆவேசம் அடைந்தார்.

நான் ஒரு ஐக்கியவாதி. ஐக்கிய ஆந்திராவுக்காக முதன் முறையாக குரல் கொடுத்தவன் நான்தான். அதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். என் மீது செருப்பு விசுவதா? என்று மீசையை முறுக்கியபடி மிரட்டினார். இதனால் போராட்டக்காரர்கள் மேலும் கோபம் அடைந்து அவருக்கு எதிராக கோஷமிட்டு விரட்டியடித்தனர். இந்த நிலையில் மந்திரியின் ஆதரவாளர்களில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் மீது செருப்பு வீசினார்.

இதனால் வக்கீல்கள் கோபம் கொண்டனர்.

அவர்கள் மந்திரியை சூழ்ந்து விரட்டியடித்தனர். போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கி மந்திரி திக்குமுக்காடினார். பொலிஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி மந்திரி வெங்கடேசை பாதுகாப்பாக மீட்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி