ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

வெங்காயத்தால் பணவீக்கம்

வெங்காயத்தால் பணவீக்கம்

வெங்காயம் மற்றும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக கடந்த ஓகஸ்ட் மாத பணவீக்கம் 6.1% ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜுலை மாதம் 5.79% உயர்ந்த பணவீக்கமானது ஓகஸ்ட் மாதத்தில் 8.01% உயர்ந்துள்ளது. இந்த பணவீக்கத்துக்கு அடிப்படைக் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்வே என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், அரிசி, தானியங்கள், முட்டை, இறைச்சி மற்றும் மீன்களின் விலை உயர்வும் காரணமாக அமைந்துவிட்டன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி