ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?

நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?

பாரதிராஜா

சேரன் இயக்கும் புதிய படம் 'ஜே. கே. எனும் நண்பனின் வாழ்க்கை' அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் சி. டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடைபெற்றது.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர். பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன் உட்பட பல இயக்குனர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்துகொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப் படுகிறது. தெலுங்கானா பிரச்சினையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சினைகள் உள்ளன.

காவிரிக்காக முல்லை பெரியாறுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?

தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும் அப்போது தான் நம் உரிமைகள் காக்கப்படும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி