ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

தேசிய இளைஞர் விளையாட்டு விழா வவுனியா இளைஞர்களும் பங்கேற்றனர்

தேசிய இளைஞர் விளையாட்டு விழா வவுனியா இளைஞர்களும் பங்கேற்றனர்

ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் கடந்த 27 முதல் 30 வரை நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வவுனியா சைவ பிரகாச இளைஞர் கழகம் வலைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

கபடி போட்டியில் (ஆண்கள்) தீர்ப்பி இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அத்துடன் தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் யூனியன் அணியினர் ரி. அனுஷா வெள்ளிப் பதக்கத்தையும், வித்தியா விநாயகர் கழகத்தின் ஆர். தர்சிகா குண்டு போடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி