ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263

கூட்டுறவுத்துறை மறுமலர்ச்சியடைந்துள்ளது

கூட்டுறவுத்துறை மறுமலர்ச்சியடைந்துள்ளது

பல்லாண்டு காலமாக துன்பத்தில் துவண்டு கொண்டிருந்த எங்கள் நாட்டின் கூட்டுறவு சங்க ஊழியர்களின் வாழ்க்கையில் இப்போது மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வூ தியம் போன்ற சகலவிதமான சலுகைகளைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் அவர்களைப் போன்றே மக்களுக்கு பணி செய்யும் தொழிலை புரிந்துவரும் நம்நாட்டு கூட்டுறவுத்துறை ஊழியர் கள் மிகக்குறைந்த சம்பளத்துடனும் வேறுவிதமான சலுகைகளும் இன்றி இரண்டாம் தர பிரஜைகளைப் போன்று நடத்தப்பட்டார்கள்.

1977ம் ஆண்டுக்கு முன்னர் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களை மக்கள் ஒரு சந்தேகக் கண்ணுடன் பார்த்தமைக்கு அவர்கள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு கூட்டுறவு சங்கங்களின் பொருட்களை சூறை யாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டே காரணமாக இருந்தது.

இதனால், அன்று கூட்டுறவு சங்க ஊழியர்களை சிலர் இரண்டுகால் பெரு ச்சாளிகள் என்று கூட கிண்டல் செய்வதுண்டு. அவற்றின் முகாமையா ளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பணத்தை திருடி, மாட மாளிகைகளை கட்டி சுகபோக வாழ்க்கையை நடத்திவந்தார்கள் என்று மக்கள் கண் டனக் குரலும் எழுப்புவதும் உண்டு. என்றாலும், பெரும்பாலான கூட் டுறவு சங்க ஊழியர்களுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவது நல்லதல்ல. கூட்டுறவு சங்கங்களில் பொறுப்பான பதவி வகிப்பவர்களில் சிலர் பணத்தை கையாடினாலும் சாதாரண ஊழியர் கள் வாழ்நாள் பூராவும் ஏழைகளாக தங்களுக்கு கிடைக்கும் சொற்ப தொகை பணத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார் கள்.

கூட்டுறவு சங்கங்களில் நிலவிய மோசடிகளினால் நாட்டிலுள்ள பெரும்பா லான கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தில் இயங்கியதுடன் மட்டுமன்றி வங்கிகளுக்கும், ஏனைய நிதி வழங்கும் நிறுவனங்களுக்கும் கோடான கோடி ரூபாவை கடன்பட்டு, கடனை மீள செலுத்த முடியாத கஷ்ட நிலையில் இருந்து வந்தன.

இத்தகைய சூழ்நிலையிலேயே 2005ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய் யப்பட்டார். இந்நாட்டு மக்களின் துன்பத்தை நன்கு உணர்ந்து கொள் ளும் சக்தி படைத்த மாமனிதரான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூட் டுறவுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் மேம்பாட்டுக்காக நடவ டிக்கைகளை எடுத்து கூட்டுறவுத்துறைக்கு புத்துயிர் அளித்தார்.

ஜனாதிபதி அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் கடந்த வியாழக்கி ழமை முதல் இலங்கை முழுவதும் உள்ள சகல கூட்டுறவு சங்கங்க ளில் பணிபுரியும் சுமார் 40 ஆயிரம் ஊழியர்களுக்கு அரசாங்க ஊழி யர்களுக்கான சரிசம அந்தஸ்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்க்க மான முடிவொன்றை எடுத்துள்ளது.

கூட்டுறவு சங்க சட்டத்தை திருத்தியமைத்து கூட்டுறவு சங்கங்களுக்கு சட் டபூர்வமான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை அடுத்து இவற்றில் பணி புரியும் பல்வேறு தரங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ஊழி யர்கள் அரசாங்க ஊழியர்களுக்கு இருப்பது போன்ற சம்பள உயர்வு, பதவிகள், இடமாற்றம், பதவி உயர்வு ஆகிய சகல உரிமைகளையும் பெறுவதுடன் அவர்களுக்கு காலக்கிரமத்தில் ஓய்வூதியத்தை வழங்கு வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த கூட்டுறவு அமைப்புகள் இலங்கை மக்களுக்கு முதலாவது உலகமகா யுத்தத்தின் போதும் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போதும் உணவுக்கு பஞ்சம் ஏற்படாத வகையில் பங்கீட்டு முறையில் அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசிய உண வுப் பொருட்களை பகிர்ந்தளித்து இந்நாட்டு மக்களின் பேரபிமானத் தைப் பெற்று விளங்கின.

1972ம் ஆண்டில் கூட்டுறவு துறைக்கு சட்ட அந்தஸ்தை கொடுப்பதற்கான சட்டமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு பல சலுகைகள் கிடைத்தன. அதையடுத்து 1979ம் ஆண்டு அந்தச் சட்டம் திருத்தப்பட்ட பின்னரும் பல்வேறு உத்தியோகபூர்வ சுற்றறிக்கையின் மூலமும் கூட்டுறவுத்துறை ஊழியர் களுக்கு உதவிகளை அரசாங்கம் செய்து வந்தது. 1977ம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன அறிமுகம் செய்த கட்டுப்பாடற்ற திறந்த பொரு ளாதார கொள்கை இந்நாட்டில் கூட்டுறவுத் துறைக்கு பெரும் தாக்க த்தை ஏற்படுத்தியதனால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தன. இதனால், கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளுக்கும், ஏனைய அமைப்புகளுக்கும் கோடான கோடி ரூபா கடனை செலுத்த முடியாது கூட்டுறவு இயக்கமே மூடு விழாவை எதிர்நோக்கிக் கொண் டிருந்த போது 2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ ர்கள் கூட்டுறவு துறையை அழிவில் இருந்து மீட்டெடுத்தார். உலக நாடுகள் அனைத்திலும் கூட்டுறவு இயக்கங்கள் மக்களுக்கு செய்யும் சிறந்த சேவையை மனதில் கொண்டே எங்கள் நாட்டிலும் கூட்டுறவுத் துறையை அழிவிலிருந்து காப்பாற்றுவது அவசியம் என்பதை உணர் ந்து இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினார். கூட்டுறவு சங்கங் கள் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான கடனை அரசாங்கமோ, வங்கிகளோ அறவிடலாகாது என்ற உத்தரவு கூட்டுறவு சங்கங்களின் மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்று நாட்டில் 80 லட்சம் பேர் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்.

அரசாங்கம் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கையின் மூலம் கூட்டுறவு சங்க அங்கத்தவர்களும் நன்மையடைவார்கள் என்று அறிவிக்கப்படு கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினால் வெகுவிரைவில் கூட்டு றவு சங்கங்கள் ஏனைய தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட் டுக் கொண்டு தங்கள் மக்கள் சேவையை தொடரக்கூடியதாக இருக்கு மென்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி