ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

மத்திய முகாமில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி

மத்திய முகாமில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி

மத்திய முகாம் ஜி.எம்.எம். வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2011.11.06) மற்றும் திங்கட்கிழமை (2011.11.07) ஆகிய இரு தினங்களிலும் காலை 11.00 மணிமுதல் இரவு 7.30 வரை மத்திய முகாம் ஜி. எம். எம். வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பழைய மாணவர் சங்க தலைவர் எம். ஏ. நZர் தலைமையில் நடைபெறவுள்ளது.

த்திய முகாமிலுள்ள மூவின மக்களும் கலந்து கொள்ளும் ஐக்கிய விளையாட்டு விழாவின் முதல்நாள் நிகழ்வாக மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் உட்பட மேலும் பல பாரம்பரிய விளையாட்டுக்களும், இரண்டாம் நாள் நிகழ்வாக மைதான மற்றும் மேடை விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி