ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்ய விளையாட்டு அமைச்சு நடவடிக்கை

சுகததாச விளையாட்டு அரங்கின்

புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்ய விளையாட்டு அமைச்சு நடவடிக்கை

2012ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை முன்னிட்டு சுகததாச மைதானத்தின் திருத்தப் பணிகளை துரிதமாக நிறைவு செய்யும் முகமாக விளையாட்டுத் துறை அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் ஆரம்பித்துள்ள நீச்சல் தடாகம் மற்றும் உதை விளையாட்டு மைதானம் என்பவற்றின் திருத்தப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே கடந்த 03ஆம் திகதி காலை சுகததாச மைதானத்தின் திருத்தப் பணிகளை பார்வையிடுவதற்காகச் சென்றபோது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு மேலாக சுகததாச நீச்சல் தடாகத்தில் இருந்த நீர் கசிவு காரணமாக விளையாட முடியாது போனதுடன், தற்போது அதன் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் உதைபந்தாட்ட மைதானத்தின் புனரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட் டுள்ளதுடன் இவை இரண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும். அத்துடன் ஓடுபாதையின் புனரமைப் பிற்கான கேள்வி அழைப்புக்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதன் புனரமைப்புப் பணிகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் நிறைவடையு மென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி