ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263

வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களத்த நவீனமயப்படுத்த ஜப்பான், கொரியா உதவி

அனர்த்தங்களை முன்கூட்டியே அறியும் வசதி

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க விசேட ஏற்பாடு

2013ம் ஆண்டுக்கு முன்னர் வளிமண்டல ஆய்வு திணைக்களத்தை நவீனப்படுத்தி அதனை தரம் உயர்த்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கொரியாவின் கொய்கா (KOICA) மற்றும் ஜப்பானின் ஜெய்கா (JAICA) நிறுவனங் களின் நிதி உதவியின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. காலநிலை பற்றி சரியான தகவல்களை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் எண் ணக்கருவை நிறைவேற்றுவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நான்காவது பருவப் பெயர்ச்சி மழைக் காலம் பற்றிய கருத்தரங்கு கொழும்பு ஜனாகி ஹோட்டலில் நடைபெற்ற போதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காலநிலை பற்றிய தகவல்களை முன் கூட்டியே அறிவது அவசியம் என்று கூறினார்.

விவரம் »

தொழில்வாய்ப்பின்மையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு இயலுமான விதத்தில் தொழில் மற்றும் தொழில் முயற்சி முகாமைத்துவ நிலையம் ஒன்றை தாபிப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிப்பு நிறைவு

விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் இறுதி யறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆணைக்குழுவின் இறுதியறிக்கை தயாராகியுள்ள நிலையில், இறுதிநேர செவ்விதாக்கப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வார இறுதியில் அறிக்கை முழுமையாகத் தயாராகிவிடும் என அவர் தினகரனுக்குத் . . .

விவரம் »

யாழ். வலிகாமம் கல்வி வலயத்தின் தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ‘நல்லெண்ண மனப்பான்மைகளை விருத்தி செய்வோம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளர் சீலரத்ன செனரத் தமிழ் மொழியில் தெளிவூட்டல் சொற்பொழிவொன்றை நிகழ்த்துவதையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம். (படம்: சிறி குணசேகர)

உலகின் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் ஒபாமா முதலிடம்

2011ஆம் ஆண்டில் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனப் பிரதமர் ஹ¥ ஜிந்தாவோ, ரஷ்யப் பிரதமர் விலாடிமீர் புட்டீன் ஆகியோரைப் பின்தள்ளி அமெரிக்க ஜனாதிபதி இப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் போர்பஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் உலகில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலின் 11வது இடத்தை . . . .

விவரம் »


நைவல உயர் தொழில்நுட்ப கற்கை நிலையத்தில் ‘அக்ரோ எக்ஸ்போ 2011’ கண்காட்சியை ஆரம்பித்து வைத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தாவரங்களைப் பார்வையிடுவதையும், அருகில் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க நிற்பதையும் படத்தில் காணலாம். (படம் : சமிந்த ஹித்தட்டிய)