ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

விண்வெளி நிலையத்தில் இணைந்தது சீன விண்கலம்

விண்வெளி நிலையத்தில் இணைந்தது சீன விண்கலம்

பூமிக்கு மேலே 343 கி.மீ. தொலைவில் சீனா உரு வாக்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் அந்நாட்டின் ‘ஷென்ஷாவூ-8’ என்ற ஆளில்லா விண் கலம், நேற்று முன் தினம் வெற்றிகரமாக இணைந் தது. அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும் ‘மிர்’ சர்வதேச விண் வெளி நிலையத்திற்கு போட்டி யாக சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலை யத்தை 2020க்குள் உருவாக்கத் திட்ட மிட்டுள்ளது.

இதன் முதல் கட்ட மாக கடந்த செப் டம்பர் 29ம் திகதி ‘தியான் காங்-1’ என்ற விண் வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகர மாக விண்ணில் நிறுவப் பட்டது. சீனாவின் கோபி பாலை வனத்தில் உள்ள ஜியூக்குவான் செயற் கைக்கோள் ஏவுதளத் திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் ‘ஷென்ஷாவூ-8’ என்ற ஆளில்லா விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஷென்ஷாவூ-8 விண்கலம் நேற்று தியான் காங்குடன் அமைதியான முறை யில் இணைந்தது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி