ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

எஇலங்கை அணி 413 ஓட்டங்கள்

எஇலங்கை அணி 413 ஓட்டங்கள்

இலங்கை - பாகிஸ்தான் அணிக ளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி சகல விக் கெட்டுக்களையும் இழந்து 413 ஓட்ட ங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 144 ஓட்டங்களையும் அணித் தலைவர் டில்சான் 92 ஓட்டங் களையும் ஜயவர்தன 39 ஓட்டங்க ளையும் கெளஷல் சில்வா 39 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 17 ஓட்டங்க ளையும் பரணவிதான 4 ஓட்டங்க ளையும், குலசேகர 15 ஓட்டங்களையும் ரன்தீவ் ஒரு ஓட்டத்தையும், பிரசாத் 17 ஓட்டங்களையும் ஹேரத் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டி டுபாய் சர்வதேச விளை யாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது.

இதேவேளை பந்து வீச்சில் அஜ்மல் 4 விக்கெட்டையும், உமர் குல் 3 விக்கெட்டை யும், யுனைத் கான் 2 விக்கெட்டையும் அப்துர் ரஹ்மான் ஒரு விக்கெட்டையும் விழ்த்தினர். இதேநேரம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிற்காக 2 வது நாள் ஆட்ட நேரடி முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பாக முகம்மட் ஹபிஸ் 6 ஓட்டங்களைப் பெற்று வெலகெத ரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென் றார்.

பாகிஸ்தான் அணி 378 ஓட்டங்கள் பின்னி லையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று போட்டியின் 3 வது நாளாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி