ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

கரப்பந்தாட்ட போட்டி

கரப்பந்தாட்ட போட்டி

இலங்கையின் வலது குறைந்தோர் கரப்பந்தாட்ட அணிகள் இம்மாதம் 16 முதல் 25 வரை சீனா பீஜிங்கில் நடைபெறவுள்ள ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டிகளில் கலந்துகொள் ளவுள்ளன. ஆண், பெண் அணிகளைச் சேர்ந்த சுமார் 26 பேர் கலந்துகொள்ளவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மூவர் பங்கேற்கவுள்ளனர்.

அண்மையில் கம்பூச்சியாவில் நடைபெற்ற உலக தரப்படுத்தல் சம்பியன்சிப் போட்டிகளில் ஜேர்மன் அணியினை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்ததன் மூலம் வலது குறைந்த கரப்பந்தாட்ட அணிக்கு மேலும் வலுவூட்டல் சம்பவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி