ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

புகை அபாயத்தை எச்சரிக்கும் கருவி!

புகை அபாயத்தை எச்சரிக்கும் கருவி!

புகை பிடிப்பவரை விட அருகில் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் சிவகாசி பழனியாண்டவர் காலனியைச் சேர்ந்த இளைஞரான ரவிசங்கர், புகையால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்குவதற்காக தெர்மாகோல், அட்டை, சிறிய பிளாஸ்டிக் குழாய்களால் மனித உருவ அமைப்பில் ஒரு கருவியை வடிவமைத்துள்ளார்.

இதில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற இதயம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளும் இடம்பெற்றுள்ளன. மின்சாரம் மற்றும் பட்டரியால் இயங்கும் இதில் ஒரு பொத்தானை அழுத்தினால் புகை உள்ளே இழுக்கப்படுகிறது. மற்றொரு பொத்தானை அழுத்தினால் புகை வெளியேறுகிறது.

இதை வைத்து, புகை உடலில் தங்கி எப்படி பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கு உலை வைக்கிறது? என அவர் செயல் விளக்கமாக காட்டுகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி