ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

காதல் ஏமாற்றம்!

காதல் ஏமாற்றம்!

உயிரோடு உயிராய் நின்று

உன்னை உள்ளங்கையில் காப்பேன்

என்றாய்!

இன்பத்தை தந்து இன்னல்கள் இல்லாமல்

இரு கையிலும் ஏந்துவாய்

என்றாய்!

கண்ணெதிரே வைத்து கண்கலங்காமல்

காவலாய் நிற்பாய்

என்றாய்!

நம்பினேன்- என்னைவிட

உன்னை- நம்பினேன்

நேசித்தேன்- என்னைவிட

உன்னை நேசித்தேன்

அளித்தேன்- என் இதயத்தில்

உனக்கொரு இடத்தைக்

கொடுத்தேன்!

முடிவில் புரிந்தது

பணம் வாங்காமல்

வாழ்க்கையில் நடித்துச் சென்றாய் என்று!

நஷ்ட ஈடாக நீ பணத்தை கோரவில்லை

மாறாக

என் இதயத்தையல்லவா சிறை பிடித்தாய்

கண்ணீர் வடிக்கிறேன்...

காதலில் நான் ஏமாற்றமடைந்ததற்கு,

ஒரு நாள்...!

உனை தேடி வருவேன்

என்னை போல் எத்தனை இதயம்

சிறைபிடித்தாய் என்பதை பார்க்க

உன் இதயமும் ஒரு நாள்

சிறைபடும் ஒரு மாதுவிடம்!

அப்போது தெரியும்

காதலும்

என் வலியும்

என் வேதனையும்

அப்போது கூட நான் காத்திருப்பேன்

என் இதயத்தைப் பெற!

உன் பிரியசகியாக இருக்க

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி