ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

புகை பிடிப்பவர்கள் Vs புகைபிடிக்காதவர்கள்

புகை பிடிப்பவர்கள் Vs புகைபிடிக்காதவர்கள்

புகைப் பிடிக்காத பெண்கள் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் மிகப் பிந்தியே இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புகைபிடிக்கும் பெண்கள், புகைபிடிக்காத பெண்களைக் காட்டிலும் 14 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்பட்டுகின்றனர் என ஐரோப்பிய இருதயவியல் ஆராய்ச்சி சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாக நோர்வே மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

புகை பிடிக்கும் ஆண்கள், புகைபிடிக்காத ஆண்களைக் காட்டிலும் 6 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

இது ஒரு சிறிய வித்தியாசமில்லை’ என்கின்றார், இத்தாலி, பவியாவில் அமைந்துள்ள விஞ்ஞான நிறுவகத்தைச் சேர்ந்த இருதயவியல் தொடர்பான நிபுணர், மருத்துவர்  Silvia Priori  மேலும் பெண்கள் புகைப் பிடிப்பதனால் ஆண்களைக் காட்டிலும் அதிகமானதை இழக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றார்’ மருத்துவர்  Silvia Priori  தனது கருத்தினை ஆய்வுத் தகவலுடன் ஒப்பிடவில்லை.

நோர்வே, லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் பணி புரியும் மருத்துவர் Morten Grundtvig  மற்றும் அவரது குழுவினர் முதற் தடவையாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1784 நோயாளர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தமது ஆய்வினை மேற்கொண்டனர்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், புகைபிடிக்காத ஆண்களுக்கு, சராசரியாக அவர்களது 72 வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது புகை பிடிக்கும் ஆண்களுக்கு, சராசரியாக அவர்களது 64 வது வயதில் 1 வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் புகை பிடிக்காத பெண்களுக்கு, சராசரியாக அவர்களது 81 வது வயதில் 1 வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகை பிடிக்கும் பெண்களுக்கு, சராசரியாக அவர்களது 66வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.

இறுதியாக ஆராய்ச்சியாளர்கள், மாரடைப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு பெண்களுக்கிடையேயான வித்தியாசமாக 14 ஆண்டுகளையும், ஆண்களுக்கிடையேயான வித்தியாசமாக 6 ஆண்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

முன்னைய ஆய்வுகளின் பிரகாரம், பொதுவான பால்நிலை வேறுபாடுகள் தொடர்பில் ஒரு உறுதியான முடிவுக்கு வரவில்லை. மருத்துவர்கள், பெண்களில் காணப்படும் ஓமோன்களே அவர்களை இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பதாக நீண்டகாலமாக சந்தேகம் கொண்டிருந்தனர்.

மருத்துவர்  Grundtvig கருத்து வெளியிடுகையில், புகைப்பிடிப்பதானது பெண்களுக்கு மொனோபாஸினை முன்னதாகவே எற்படுத்துகின்றதுடன், மேலும் மாரடைப்பிலிருந்தான சிறியதான பாதுகாப்பும் விலகிவிடுகின்றது என்கின்றார்.

ஆண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது வீழ்ச்சியடையும் அதேவேளை பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது அதிகரித்துச் செல்வதாக ஒப்பிடப்படுகின்றது. மருத்துவர்  Grundtvig கருத்து வெளியிடுகையில், பெண்களிடையே இருதய நோய் பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டுகே பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும், அமெரிக்க இருதயவியல் கல்லூரி பேச்சாளருமான மருத்துவர் Robert Harrington  கருத்துத் தெரிவிக்கையில் புகை பிடிப்பதானது, பெண்கள் இயற்கையாகவே அவர்கள் கொண்டுள்ள நன்மையானவற்றை அழித்துவிடும்’ என்கின்றார்.

இருதயப் பாதிப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான கொலஸ்ரோல் ஆகியவை பெண்களினை வேறுபாடாகவே பாதிக்கின்றது என்பதனை இதுவரை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லையாம்.

தமது வாழ்வில் புகைப்பிடிக்காதவர்கள் தாமாகவே நோய்களினை நாடிச் செல்லவில்லை என்பதுடன் புகைப்பிடிப்பவர்கள் முன்னதாகவே இளைய வயதில் தமது புகைப்பிடிக்கும் பழக்கங்களைக் கைவிடுவதன் மூலம் கொடிய நோய்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்பது ம(ற)றைக்க முடியாத உண்மையாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி