ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

மாத்தளை மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது பிள்ளைகளின் கல்வித்துறையில் கவனம் செலுத்த வேண்டும்

மாத்தளை மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது பிள்ளைகளின் கல்வித்துறையில் கவனம் செலுத்த வேண்டும்

- பிரதியமைச்சர் பiர் சேகுதாவூத்

முஸ்லிம்களுக்கு மத்தியில் கல்வித்துறையில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படாத வரை முஸ்லிம் சமூகத்தில் ஒரு வளர்ச்சியையோ எழுச்சியையோ காண முடியாது.

வர்த்தகமே தமது பரம்பரைத் தொழில் என எண்ணி தமது குழந்தைச் செல்வங்களையும் வர்த்தகத்துறையிலேயே ஈடுபடுத்துவார்களேயானால் காலப் போக்கில் எமது முஸ்லிம் சமூகத்தில் கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் காண முடியாமல் போய்விடும். எனவே! முஸ்லிம் பெற்றார்கள் தமது குழந்தைகளின் கல்வி விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் பiர் சேகு தாவூத் தெரிவித்தார்.

மாத்தளை முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பாராட்டும் விழாவில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் பiர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாத்தளை இஸ்லாமிய இளைஞர் அபிவிருத்தி மன்றமும், இலங்கை வாமி நிறுவனமுமு இணைந்து நடாத்திய மேற்படி பாராட்டு விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் பiர் சேகுதாவூத்!

எமது பரம்பரையினர்கள் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது புதுக்கதையல்ல.

நம்மவர்கள் வர்த்தகத் துறையில் மட்டும் தமது கவனங்களை செலுத்தாமல் கல்வித் துறையிலும் கவனத்தை செலுத்துவது காலத்தின் தேவையாகும்.

கிழக்கு மாகாணத்தில் நாம் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளோம். கிழக்கில் எந்த வீட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கு சுமார் மூன்று நான்கு பட்டதாரிகள் இருக்கின்றார்கள்.

வைத்தியர்களையும் பொறியிய லாளர்களையும், சட்டவல்லு நர்களையும் உருவாக்குவதில் கிழக்கு மாகாண மக்கள் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொலைக்காட்சிப் பெட்டியில் தேவையற்ற நிகழ்ச் சிகளுக்கு கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டு பிள்ளைகளின் கல்வி விடயத்தி பூரண கவனம் செலுத்தி னால் காலப் போக்கில் கிழக்கு மாகாணத்தை விட மாத்தளை மாவட்டத்தில் கல்வியில் மிகைத்த ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். (ஐ-ஞ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி