ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

கண்டி போதனா வைத்தியசாலையில் 1000 மில்லியன் ரூபா செலவில் புற்றுநோய் தடுப்பு பிரிவு

கண்டி போதனா வைத்தியசாலையில் 1000 மில்லியன் ரூபா செலவில் புற்றுநோய் தடுப்பு பிரிவு

கண்டி போதனா வைத்தியசா லையோடு இணைந்ததாக 1000 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதான புற்று நோய் தடுப்புப் பிரிவொன் றினை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தேச புற்று நோய் தடுப்புப் பிரிவு நிறுவப்படும் பட்சத்தில் மத்திய, ஊவா வடமத்திய, வட மேல், சப்ரகமுவ மாகாணங் களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு இது மிகவும் வரப்பிரசாதமாக அமையும் என கட்டட அமைப்புக் குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மஹரகம புற்று நோய் வைத்திய சாலைக்கு அடுத்த படியாக மக்களு க்கு சிறந்த சேவையாற்றும் நிலைய மாகவும் இது திகழும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 240 கட்டில் களைக் கொண்டதாகவும் ஏக கால த்தில் செயல்படக்கூடிய 4 சிகிச்சை நிலையங்களை உள்ளடக்கியதாகவும் விளங்கவுள்ள இப்பிரிவில் தினசரி 300 நோயாளர்களுக்கு சிகிச்சைய ளிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

ஒன்பது மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக் கட்டடத்துக்கான நிதியை ஜனாதிபதி நிதியம். சுகாதார அமைச்சு, பொதுநல அமைப்புகள், பரோ பகார சிந்தை கொண்டவர்கள் என்போர் வழங்க முன்வந்துள்ளனர். (ஐ-ஞ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி