ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

கிழக்கு மாகாண விளையாட்டு விழா அம்பாறை, மட்டக்களப்பில்

கிழக்கு மாகாண விளையாட்டு விழா அம்பாறை, மட்டக்களப்பில்

கிழக்கு மாகாண பாடசாலைக ளுக்கிடையிலான மாகாண மட்ட குழு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 24ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற வுள்ளன.

இதன்படி அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் 24 ஆம் திகதி ஆண், பெண்களுக்கான எல்லேயும், 25 ஆம் திகதி கபடி யும், 26ஆம் திகதி அம்பாறை டி. எஸ். சேனநாயக்க விளையாட்ட ரங்கில் வொலிபோல் போட்டிக ளும் முதல் கட்டமாக நடைபெற வுள்ளன.

இரண்டாம் கட்டமாக 28ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் விளை யாட்டரங்கில் 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட மும், கராத்தேயும், 29ஆம் திகதி 17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைப்பந்தாட்டம் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத் திலும், உடற் பயிற்சி போட்டியும், நடைபெறவுள்ளதுடன், அதே தினத்தில் மட்டக்களப்பு மெதஸ் டித்த கல்லூரியில் கரம் போட்டி யும் இடம்பெறுகிறது.

30ஆம் திகதி மட்டக்களப்பு அர சடி மகா வித்தியாலய மைதான த்தில் பேட்மிண்டன் பெண்களுக்கு மான போட்டியும் அதே தினத்தில் மட்டக்களப்பில் சைக்கிலோட்ட மும், அரை மரதன் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

01 ஆம் திகதி பேட்மிண்டன் ஆண்கள், மேசைப்பந்து ஆண், பெண்களுக்கான போட்டிகள் ம/ மஹஜன கல்லூரி மைதானத் திலும், 02 ஆம் திகதி கூடை ப்பந்து, ஆண்கள் ம/செந்மைக்கல் கல்லூரி மைதானத்திலும், செஸ் ஆண், பெண் கூடைப்பந்து பெண் ம/இந்துக் கல்லூரி மைதானத் திலும் நடைபெறவுள்ளன.

03 ஆம் திகதி கிரிக்கெட் ஆண் கள் மட்டக்களப்பு வெபர் மைதா னத்திலும் உதைபந்து பெண்கள் ம/இந்துக் கல்லூரியிலும், 4ஆம் திகதி கிரிக்கெட் பெண்கள் ம/வெ பர்மைதானத்திலும், டெனிஸ் ஆண், பெண் போட்டிகள் மாநகர மண்டப விளையாட்டரங்களிலும், 05 ஆம் திகதி வலைப்பந்து ம/வெபர் மைதானத்திலும் நடை பெறவுள்ளன.

மூன்றாம் கட்டமாக 07, 08, 09 ஆம் திகதிகளில் மெய் வல்லுநர் போட்டிகள் யாவும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடை பெறவுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி