ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி  திராய்மடு வி. கழகம் வெற்றி

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி  திராய்மடு வி. கழகம் வெற்றி

சென்றல்கேம்ப் இலுப்பைக் குளம் மேன்பவர் விளையாட்டுக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் திராய்மடு விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களிலிருந்து 41 விளையாட்டுக் கழகங்கள் இக் கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றின. இதில் கல்லடி விபுலானந்தா விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும், மூதூர் சிறுமலர் விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தையும், நாவிதன்வெளி 15ஆம் கிராமம் சுதந்திரன் விளையாட்டுக் கழகம் நான்காம் இடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகத்திற்கான கேடயத்தையும் 6000 ரூபா பணப்பரிசினையும் நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ. ஆனந்தனும், இரண்டாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகத்திற்காக கேடயத்தையும் 4000 ரூபா பணப்பரிசினையும் மேன்பவர் விளையாட்டு கழக தலைவர் ரீ. சுதர்ஷனும், மூன்றாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகத்திற்கான கேடயத்தையும் 2000 ரூபா பணப்பரிசினையும் மேன்பவர் விளையாட்டு கழக உறுப்பினர் கே. மகேந்திரனும் நான்காம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகத்திற்கான கேடயத்தையும் 1000 பணப் பரிசினையும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். றஞ்சனும் வழங்கி வைத்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி