ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

ஏறாவூர் அல்-முனீராவில் முதலாவது விளையாட்டு விழா

ஏறாவூர் அல்-முனீராவில் முதலாவது விளையாட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூற்றாண்டு விழாக்காணும் ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் முதலாவது விளையாட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

பாடசாலை அதிபர் எம். ஜே. றபியுதீன் தலைமையில் நடைபெறும் இவ் விளையாட்டு விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் கலந்துகொள்வார்.

கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மெளலானா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்களுக்கென 1916ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலை ஏறாவூர் அல் முனீரா பாலிகா கல்விக் கூடமென தெரிவிக்கப்படுகிறது.

1967ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரத்திற்கும் 82ஆம் ஆண்டு உயர் தரத்திற்கும் இங்கிருந்து மாணவிகள் தோற்றினர்.

இப்பாடசாலையின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு தொடர்ச்சியாக மாணவிகள் தெரிவு செய்யப்படுவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

புகழ்பெற்ற கவிஞர் புரட்சிக் கமால் எம். எம். சாலிஹ் இங்கு சில காலம் அதிபராய் பணிபுரிந்தமை குறிப் பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி