ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை

இடைக்கால சபை தகவல்

ஸ்ரீலங்கா கிரிக் கெட்டில் பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்பட வில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நடைமுறை கணக்கில் 10 மில்லியன் ரூபாய் இருப்பதாக அதில் நிலுவைகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபை கூறியுள்ளது.

எனினும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தனியான கணக்கிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி) நிதி வரவேண்டியுள்ளதால் தற்போது 220 மில்லியன் ரூபா வழங்க வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து உண்மைத்தன்மை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பொருளாளர் சுஜீவ ராஜபக்ஷ கூறும்போது உலகக் கிண்ண கிரிகெட் போட்டிக்காக மூன்று மைதானங்களை அமைப்பதற்கு இலங்கை வங்கியிடம் 20 மில்லியன் டொலரையும் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலிடம் 3.5 மில்லியன் டொல ரையும் கடனாக பெற்றுள்ளோம். இதில் இலங்கை வங்கியிடம் பெற்ற கடனில் 7 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதோடு ஐ.சி.சியிடம் பெற்ற கடனை மீள செலுத்த 4 ஆண்டுகால அவகாசம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பல்லேகல, சூரியவெவ மற்றும் ஆர். பிரேமதாச அரங்குகளை அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 3.2 மில்லியன் என்றபோதும் செலவுகள் அதிகரித்ததனால் கடன் 4.4 மில்லியன் ரூபாவாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் மூலம் இலங்கைக்கு 20.44 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்ட சுஜீவ ராஜபக்ஷ தற்போது 7 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைத் துள்ளதாகவும் செலவீனங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் ஐ.சி.சி. எஞ்சிய தொகையை விடுவிக்கும் எனவும் தெரிவித்தார்.

இதில் உலகக் கிண்ண போட்டிக்கான மைதானங்களை அமைப்பதற்கு மட்டும் இலங்கை கிரிக்கெட் நிதி வழங்கியது. உலகக் கிண்ணத்திற்கான ஏனைய செலவுகள் அனைத்தும் ஐ.சி.சியே பொறுப்பேற்றுள்ளது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பொருளாளர் சுட்டிக் காட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி