வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010


மாத்தறையில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவுவதாக எச்சரிக்கை

மாத்தறையில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவுவதாக எச்சரிக்கை

மாத்தறை மாவட்டத்தில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் கிராமப்புற மக்களிடையே மீண்டும் எலி காய்ச்சல் நோய் தலைதூக்கியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 16 பேர் எலி காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மாத்தறை, அகுரஸ்ஸ, தெனியாய , கம்புறுபிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடுமையான தலைவலி, மயக்கம், உணவு உண்ண முடியாமை, உடம்பு வலி என்பன எலி காய்ச்சல் நோயின் அறிகுறி எனவும் பாதுகாப்பான பாதணிகளை பாவித்து வயல்களில் இறங்குவதன் மூலம் தம்மை இந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். (ஐ - ஞ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »