வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010


அம்பாந்தோட்டையில் அபிவிருத்திக்கு இரு கிராமங்கள் தெரிவு

அம்பாந்தோட்டையில் அபிவிருத்திக்கு இரு கிராமங்கள் தெரிவு

அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம். பியின் ‘நாம் எமது கிராமத்தை கட்டியெழுப்புவோம்’ திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை பிரதேச செயலகங்களில் இருந்து இரண்டு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களான பெரகம மஹசூர, பதகிரிய, தம்மென்னாவ ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இக் கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களை சந்தித்து குறைபாடுகளை கேட்டறிந்து கிராமத்திற்கு தேவையான பாதைகள், மின்சாரம், நீர், போக்குவரத்து வசதிகள் என்பனவற்றோடு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (ஐ - ஞ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »