வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

சின்ன சின்ன தகவல்கள்


 

கம்பியூட்டரும் கரும் பலகைதான்

கம்பியூட்டர் உலகில் புதிய வரவு, ஸ்லேட் அல்லது டொப்லெட் கம்பியூட்டர், கையடக்கமாக உள்ள இந்த லெப்டொப் ரக கம்பியூட்டர் ஸ்மார்ட் போன் - கம்பியூட்டருக்கு இடையேயுள்ள இடைவெளியை குறைத்து புதிய தொழில் நுட்பத்தை தருகிறது. அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சலஸ் நகரில் நடந்த சர்வதே எலக்ட்ராணிக் கண்காட்சியில், ஆப்பிள் உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் புதிய சாதனங்களை காட்சிக்கு வைத்திருந்தன.

அதில் ஆப்பிள் வைத்திருந்தது தான் இந்த புதிய ரக எலக்ட்ரானிக் சாதனம். போன் பேசுவது முதல் இசை கேட்பது, வீடியோ பார்ப்பது படம் எடுப்பது வரை பல வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் போன் வரிசையில் இந்த ஸ்லேட் அல்லது டாப்லெட் என்று அழைக்கப்படும் கம்பியூட்டர் புதிய மவுசு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இனி செல்போனை தொலைக்க மாட்டீர்கள்!

செல்போன் இல்லாத மனிதர்கள் இன்று அநேகமாகக் கிடையாது. செல்பே சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவை காணாமல் போவதும்அதிகரித்து வருகிறது. மிகவும் அலசி அலசித் தேர்ந்தெடுத்து வாங்கும் செல்போன் தொலைந்து போகும்போது அதன் உரி¨யாளருக்கு மனச்சங்கடமாக மட்டுமன்றி செலவுமிக்க இழப்பாகவும் ஆகிவிடுகிறது.

அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்த ஜோம் என்ற புதிய நுகர்வோர் மின்னுணு சாதன தயாரிப்பு நிறுவனம் இப்பிரச்சினையை ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது. செல்போன் தொலையாமல் தடுக்கும் ஒரு சிறு உபகரணத்தை சமீபத்தில் லாஸ் வேகாசில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்னணு சாதனக் கண்காட்சியில் ஜோம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு ரூபாய் நாணய அளவுக்கு இருக்கும் இந்தச் சாதனம் செல்போன் தொலைவதைத் தடுக்கும் என்கிறார்கள் இவர்கள்.

இந்தக் கருவிக்கும்ஜோம் என்றே பெயரிட்டிருக்கிறார்கள். இது புளூடூத் மூலம் வயர் ஏதுமின்றி உங்களின் செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் செல்போனை விட்டுச் சென்றால் இது ஒலியெழுப்பி உங்களை உஷார்ப்படுத்தும்.

மேலும் இது தனிப்பட்ட அலாரம் போலவும் செயல்படுகிறது. உரிமையாளர் அந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவசர நேரங்களில் எமர்ஜென்சிக்கு அழைப்பையும் அனுப்பும், அத்துடன், ஒரு ஸ்பீக்கர் போன் போல செயல்படும் இது. இன்கமிங் கால்கள் குறித்து உரிமையாளரை அலர்ட் செய்யும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு நிற்கும் பட்டரியுடன் கூடிய இந்தச் சாதனம், இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 3 ஆயிரத்து 600 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஜோம் நிறுவனத்தின் தலைவரான லாரி பெனிக்சுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த உபகரணத்துக்கான யோசனை பிறந்துள்ளது.

பெனிக்சின் நண்பரின் மனைவி மூன்றாவது முறையாக செல்போனை தொலைத்துவிட்டார் என்று அறிந்த போது எத்தனை பேர் இதைப் போல அவதிப்படுவார்கள் என்று யோசித்து தடுப்பதற்கான கருவியை உருவாக்கத் தீர்மானித்தாராம் பெனிக்ஸ்.

போதிமரத்தடியை வணங்கிய தலாய்லாமா!

திபெத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தர பல ஆண்டாக போராடி வரும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா. சீன அரசின் நெருக்கடிகளால் இந்தியாவில், இமாச்சல் பிரதேசம், தர்மஸ்தலாவில் தங்கி வருகிறார். திபெத் விஷயத்தில் தொடர்ந்து தலாய் லாமாவுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. சமீபத்தில் பீகாரில் உள்ள புத்தகயாவிற்கு விஜயம் செய்த தலாய் லாமா, புத்தர் ஞானம் பெற்றதாகக் கருதப்படும் போதி மரத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

ஓவியம் விரும்பிய ஹொலிவுட் பிரபலம்!

ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும், ராக்கி ஸ்டார் என்று புகழ் பெற்ற நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். ஒரு நடிகர் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் மிகச் சிறந்த ஓவியர் என்பது அவரை அறிந்த சிலருக்கு மட்டும் தான் தெரியும். சமீபத்தில் அமெரிக்காவில் மியாமி கடற்கரை பகுதியில் தன் ஒவியங்களை காட்சிக்கு வைத்திருந்தார்.

அப்போது தான் அவர் ஓவியர் என்பது பலருக்குத் தெரிந்தது.

சினிமா படங்களில் நடிகர்களின் பங்கு ஒரு மட்டத்திற்கு தான்.

அவர்கள் மனதில் வைத்திருந்த எண்ணத்தை நடிக்கும் படங்களில் முழுமையாக பிரதிபலிக்க முடியாது.

அது போல இயக்குநருக்கும் நூறு சதவீத அளவுக்கு படத்தை வடிவமைக்க முடியாது. ஆனால் ஓவியங்கள் அப்படியல்ல. ஓவியரின் மனதில் உள்ளத்தை அப்படியே நூறு சதவீதம் தர முடியும்.

வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அது ஓவியரை சேர்ந்ததுதான் என்று சொல்கிறார் ஸ்டாலோன்.

‘நான் சந்தோஷமாக வரைந்ததைவிட சோகத்துடன் இருந்த போது வரைந்த ஓவியங்கள் தான் தத்ரூபமாக இருக்கின்றன என்றார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •