வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

மஷ் ஹத் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் தீப்பற்றியது

மஷ் ஹத் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் தீப்பற்றியது

விமானத்தில் வந்த 46 பயணிகளுக்கு காயம்

ஈரானின் வடகிழக்கு நகரான மஷ் ஹத் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தரை யிறங்கிய விமானம் ஒன்றில் தீப்பற்றியது.

இதில் அந்த விமானத்தில் பய ணம் செய்த 46 பேர் காயமடைந் தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமா னத்தில் தீப்பிடித்ததை அறிந்ததுமே விரைந்துவந்த அவசரகால பாது காப்பு வீரர்கள் பயணிகள் அனை வரையும் பாதுகாப்பாக மீட்டனர். தீக்காயம் அடைந்தவர்கள் உடன டியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.

விமானத்தின் பின்பகுதியில் தீப்பற்றியது. இந்தத் தீ எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தின் போது, 157 பயணிகளும் 13 விமான பணியாள ர்களும் விமானத்தில் இருந்துள்ள னர்.

“டுபோலேவ்” என்ற இந்த விமா னம் ரஷ்ய நாட்டில் தயாரிக்கப் பட்டது. விபத்தில் இது கடுமை யாகச் சேதம் அடைந்துள்ளது.

ஈரானின் விமானங்கள் சமீப காலமாக அடிக்கடி விபத்தை சந்தி த்து வருகின்றன. இதற்கு பரா மரிப்புக் குறைபாடே காரணம் என்பது தெரியவந்துள்ளது. ஈரான் புதிய விமானங்களை வாங்காமல் தங்களிடம் உள்ள பழைய விமான ங்களையே உபயோகித்து வருகின் றது. இதனால் அடிக்கடி கோளாறு ஏற்படுவதும் விபத்துக்கு காரணமாக உள்ளது.

ஆனால் ஈரானோ, தங்கள் மீது அமெரிக்கா கடும் தடைகளை விதித் துள்ளதால் அந்நாட்டிடம் இருந்து 1979க்கு முன்னர் வாங்கப்பட்ட விமானங்களை மேம்படுத்த முடி யாத நிலை உள்ளது என்று கூறியு ள்ளது.

(து)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •