வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு

எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிந்து விட்டதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெபனான் போக்குவரத்துத் துறை அமைச்சர் காஸி அரிடி ‘லெபனான் கடலோரப் பகுதியில் இருந்து மேற்கே 35 கி.மீ. தொலைவில் நாமீஹ் பகுதியில் எத்தியோப்பிய விமானம் விபத்துக்கு உள்ளானதாக கூறினார்.

மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருவதாகத் தெரிவித்த அவர், அந்த விமானத்தில் பயணம் செய்த 92 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களின் நிலை என்ன என்பதை கூற மறுத்து விட்டார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து நேற்று காலை எத்தியோப்பிய விமானம் புறப்பட்ட போது மோசமான வானிலை நிலவியதாகவும், விமானம் விபத்துக்கு உள்ளான காரணம் குறித்து உடனடியாக எதையும் தெரிவிக்க முடியாது என்றும் காஸி அரிடி கூறியுள்ளார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •