வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

நேபாளத்திற்குச் சொந்தமான நிலங்களை இந்தியா ஆக்கிரமிப்பு?

நேபாளத்திற்குச் சொந்தமான நிலங்களை இந்தியா ஆக்கிரமிப்பு?

நேபாளத்திற்குச் சொந்தமான நிலப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பு செய்வதாக மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறும்போது,

இந்திய தலைவர்களில் சிலர் இங்கிலாந்து அரசின் காலனி ஆதிக்க மனநிலையிலேயே செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் நேபாள நாட்டின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் கட்சி நாட்டின் சுதந்திரத்தைக் கட்டிக்காக்க உறுதியாக போராடி வருகிறது. அயல்நாடுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்தும் போராடுகிறது.

இந்திய நேபாள எல்லையில் உள்ள கலாபனி, கஸ்தா பகுதிகளில் நிலங்களை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றார். அவர், இந்தியா மீது சண்டையிட எங்களுக்கு நோக்கமில்லை. ஆனால் அதற்காக எங்களின் உரிமைகளை விட்டு கொடுக்க முடியாது அதேபோல எந்த ஒரு அயல் நாட்டு சக்திக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம் என்றார் பிரசண்டா.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •