புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

நீர்த்தேக்கத்தில் மீண்டெழும்பி நிற்கும் மவுசாகலை ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம்

நீர்த்தேக்கத்தில் மீண்டெழும்பி நிற்கும் மவுசாகலை ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம்

படம்: ஆர். ரஞ்ஜன்

வுசாகலை நீர்த்தேக்கத்தில் தற்போது 50 அடி வரை நீர் மட்டம் குறைந்து காணப்படுவதால் நீரில் மூழ்கியிருந்த ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தைக் காண பலபாகங்களிலும் இருந்து மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

மஸ்கெலியா கிராப்பு தோட்டத்தை 14.04.1869ல் ஜோன் கிரேட் என்ற பிரபு வாங்கி வெள்ளையரின் கீழ் நிர்வா கம் செய்ய வழங்கி இருந்தார். இதனால் கிரேட் துரை தோட்டம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் கிராப்பு தோட்டம் என பெயர் மாறிவிட்டது. அக்காலப்பகுதியில் மஸ்கெலியா பகுதியில் பெரிய கங்காணி யாக கிராப்பு தோட்ட ம.தா. செட்டியப்பன் பிள்ளை கங்காணி, சின்ன கங்குவத் தையைச் சேர்ந்த ம.தெ. சிதம்பரம் பிள்ளை கங்காணி, ராணி தோட்டத்தைச் சேர்ந்த ச.சி. சப்பாணிப்பிள்ளை கங்காணி, பெரிய மஸ்கெலியாவைச் சேர்ந்த தெ. பெரிய பூனாச்சிபிள்ளை, லக்கம் தோட்டத்தைச் சேர்ந்த பூ. பொறவியா பிள்ளை கங்காணி, பூ. பெரியண்ண பிள்ளை போன்றோர் ஆலயம் உருவாகக் காரணமா யிருந்தனர்.

ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கூற்றுக்கிணங்க மணியார தெவராய செட்டியப்பன் பிள்ளை கங்காணி, தலைமையில், மஸ்கெலியா நகரில் ஸ்ரீ சண்முகநாத ஆலயம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தனர். 1912ம் ஆண்டில் அப்போதைய மஸ்கெலிய நகரின் கிராப்பு தோட்ட கடைகளை அண்மித்த பகுதியில் ஆலயம் கட்டும் திருப்பணி ம.தெ. செட்டியப்பன் பிள்ளை கங்காணி தலைமை யில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான நிதியினை பொதுமக்களிடம் இருந்து பெற ஏனைய கங்காணிமார் அனைவரும் இணங்கினர். ஆலயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தென் இந்தியா வில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு தனி கருங்கற்களினால் அழகிய வடிவில் ஆலயம் அமைக்க தொடங்கினர்.

1913ம் ஆண்டு ஆலயத்திற்கான காணியை கிராப்பு தோட்டத்தை நிர்வாகித்து வந்த ஹுட், 2 சத வாடகைக்கு வழங்கினார். இவ்வாலயத்தை நிர்மாணிக்க தென்னிந்தியாவில் புகழ் பெற்ற சிஷ்யர்கள் துறையூர் பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட் டனர். இவ்வாலய வேலைகள் மிகவும் வேகமாக நடை பெற்றது 1917ம் ஆண்டு பிங்கள வருடம் வைகாசி மாதம் 26ம் திகதி (26.08.1917) அன்று ம.தெ. செட்டியப்பன் பிள்ளை கங்காணியின் தலைமையில் ஏனைய கங்காணிமார் இணைந்து வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நிறைவேறியது.

இக்கால கட்டத்தில் அரசாங்கம் நீர்மின் உற்பத்திக்காக பல காட்டாறுகளை இணைத்து ஒரு மதகு ஒன்றை கட்டினர். 1961ம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த மதகு அமைப்பதன் மூலம் 98 ஆயிரம் ஹெக்டயர் காணி நீரில் மூழ்கியது.

அதில் மஸ்கெலியா நகர், கங்கேவத்த நகர் உட்பட பல தோட்டங்கள், நீரில் மூழ்கின. நீர் தேக்கத்தின் நீர் சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மஜே ஓயா, சிவனடி பாதமலையில் இருந்து வரும் சியத்தலகங்குல ஓயா மேலும் சிற்றாறுகள் பல இதில் இணைந்தன.

கடந்த 1969ம் ஆண்டு நீர்த்தேக்கப் பணிகள் முடிக்கப்பட்டு நீர் நிரப்பும் வேலை ஆரம்பமானது. அக்காலகட்டத்தில் மஸ்கெலிய நகரம் ஆலயம் மற்றும் பல தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அனைத்தும் நீரில் மூழ்கின.

இதில் 18.03.1969ம் ஆண்டு. ஆலயத்தின் விக்கிரகங்கள் அகற்றப்பட்டு புதிய நகருக்கு கொண்டு வரப்பட்டது. புதிய நகர் என்ற பெயரை மட்டும் கொண்டிருக்கிறதே தவிர அப்பகுதி மக்கள் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. அக்காலத்தில் மஸ்கெலியா நகரில் சகல இனமக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதுடன் சிவன டிபாத மலைக்கு வரும் யாத்திரிகள் நகரில் இருந்த பெளத்த விகாரை, ஸ்ரீ சண்முக நாத சுவாமி தேவஸ்தானம், கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல், ஆகிய இடங் களில் தங்கி செல்வதுண்டு. வர்த்தகர்களும் மிகவும் செல்வாக்குடன் இருந்தனர்.

புதிய நகர் ஒரு மலைதிட்டில் கட்டி ஒதுக்கப்பட்டதால் வெறிச்சோடிய நிலையில் மஸ்கெலிய நகரம் காணப்படுகிறது. ஆனால் நகரம் ஒன்று இருப்பதாக சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரி களுக்கு 1969க்கு பின்னர் தெரியாமல் போய் விட்டது. மவுசாகலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டதால் பிரதான வீதிகள் பல நீரில் மூழ்கின, புதிய வீதிகள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக அட்டனில் இருந்து மஸ்கெலியா வழியாக கங்கேவத்தை ஊடாக சிவனொளிபாதமலை வரை செல்லும் வீதி, மஸ்கெலிய நகரில் இருந்து நோட்டன் வழியாக செல்லும் கொழும்பு வீதி, மஸ்கெலியா நகரில் இருந்து சாமிமலை செல்லும் பிரதான வீதி என பல வீதிகள் நீரில் மூழ்கின.

நீர்த் தேக்கத்தின் 43 வருடகாலமாக கம்பீரத்துடன் தோற்றம் தரும் ஸ்ரீ சண்முக நாதர் ஆலயம், பெளத்த விகாரை தற்போது சில விசமிகளினால் தகர்க்கப் பட்டுள்ள போதிலும் நீர் வற்றிய காலங்களில் அதனை பார்வையிட்டு வழிபாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை மின்சார சபையின் அதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத் தப்பட்ட போதிலும் முறையான பாதுகாப்பு இல்லை. மேலும் தற்போது நிலவி வரும் கடும் வரட்சிக் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 50 அடி குறைந்து உள்ளதால் நீரில் மூழ்கடிக்கப்பட்ட இவ்வாறான கட்டிடங்களை மக்கள் பார்வையிட வருகின்றனர்.

இலங்கை மின்சார சபை முறையாக செயற்பட்டால் நீர்த்தேக்கத்தில் உள்ள மணல், கழிமண், போன்றவற்றை அகற் றலாம். இவற்றை டென்டர் முறையில் கொடுத்தால் பல கோடி ரூபாய் மின்சார சபைக்கு வருமானமாக கிடைக்கும். அதேபோல் கழிமண்ணை, செங்கல், மண்பானைகள் செய்ய அகழ்ந்து வழங் கலாம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் நீரின் கொள்ளளவு அதிகரிக்க செய்யலாம். மேலும் மின்சார சபைக்கு அதிகளவு நிதியினை பெற்று மக்களுக்கு மின்சார கட்டணத்தை குறைத்து வழங்க முடியும். புதைபொருள் நிறுவனம் முன்வந்து ஆலயங்கள் பள்ளிவாசல் விகாரை போன்ற வற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.