புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

பெருந்தோட்டப் பகுதிகளில் போ'hக்கின்மையை ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

பெருந்தோட்டப் பகுதிகளில் போ'hக்கின்மையை ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

,லங்கையில் வறுமையில் வாடுவோர் அதிகமாக பெருந்தோட்டப் புறங்களிலேயே உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் ஜனாதிப தியால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் அறிக்கையிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு போஷாக்கு சம்பந்தமான ஆய்வில் இம் மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர் களின் பிள்ளைகளில் 23.8 வீதமானவர்கள் நீண்ட காலமாக போஷாக்கில்லாமல் இருப்பதாகவும் இப்படிப்பட்ட குழந்தைகள் வயதிற்கேற்ப வளர்ச்சி அடையாதவர்களாகவும் மற்றும் ஐந்து வயதிற்குக் குறைந்த பிள்ளைகளில் 26.6 வீதமானவர்கள் நிறை குறைந்தவர்களாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

போஷாக்கின்மையால் சிறுவர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவ் அறிக்கையில் அதற்கு பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் ஏற்பட்டுள்ள குறைப்பாடுகளே முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து அரை மணித்தியாலத்திற்குள் தாய்ப்பால் ஊட்ட வேண்டுமென்பது மிகவும் முக்கியமான தாகும். அதேவேளை கட்டாயமாக குழந்தை களுக்கு ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரம் ஊட்ட வேண்டுமென்ற ஆலோசனையை சர்வதேச சுகாதார ஸ்தாபனம் (தீசிலி) முன்வைத்துள்ளது. ஒரு பிள்ளையின் சுவர்ணமயமான காலம் அந்த பிள்ளை தனது தாய் வயிற்றிலிருந்து இரண்டு வயதை அடையும் வரையிலாகும்.

ஆனால், தோட்டங்களில் தொழில் செய்யும் பெண்களுக்கு இவ்வாறான வசதிகள் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக் குழு முன்வைத்துள்ள போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மகிந்த சிந்தனை மூலம் மேற்கொள்ளவதாகவும், அதன்படி 2016ஆம் ஆண்டில் போஷாக்கு நிறைந்த நாடாக இலங்கையை உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தோட்டப்புறங்களில் போஷாக்கின்மையை ஒழிக்காமால் இந்த நோக்கத்தை நமது நாடு முழுமையாக நிறைவு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தோட்டப்புற பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் பிரசவ விடுமுறையை மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக உயர்த்த வேண்டுமென்றும் அல்லது ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் அரச பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரசவ விடுமுறை திட்டத்தை தோட்டப்புற தாய்மாருக்கும் வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தொழில் வழங்குவோர் ஆட்சேபம் தெரிவிப்பார்கள். ஏனெனில் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாலும் பிரசவ சகாயப் பணம் இரட்டிப்பாகுவதாலும் நிர்வாகங்களுக்கு பொருளாதார சுமை ஏற்படலாமென்பதே. ஆனால், புள்ளி விபரங்களின்படி சகல தோட்டத் தொழிலாளர்களின் பிரசவ விகிதம் வருடத்தில் சராசரியாக 5 வீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றதால் இது நிர்வாகங்களுக்குப் பெரும் பொருளாதார சுமையாக இருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு விடுமுறை வழங்குவதில் பிரச்சினைகள் இருப்பின் அந்த தாய்மாருக்கு தங்களது பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்கும் தாய்ப்பால் ஊட்டுவதற்கும் வசதியான பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் தோட்டங்களில் அமைத்துக்கொடுக்க வேண்டுமென நிர்வாகங் களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக மகளிர் மற்றும் சிறுவர் சம்பந்தமான தொழில் ஆணையாளர் திருமதி எம். ஏ. எம். ஹரிபா சகல தொழிற் சங்கங்களின் கருத்து களையும் கோரியுள்ளார். இதன்பின் பிரசவ விடுமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு. பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி ஒரு திடசங்கற்பமான சமூதாயத்தை உருவாக்குவது ஒரு சமூகப் பிரச்சினையானதால் இந்த வேலைத் திட்டத்திற்கு சகல தொழிற்சங் கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகள் போன்றோர் ஆதரவு நல்க வேண்டும்.

அதேவேளை கீழ்க் காணும் விடயங்கள் தொடர்பாக அரசுக்கும் தோட்ட நிர்வாகங் களுக்கும் நாம் தெரிவித்துக்கொள்வதாவது,

u வறுமையில் வாடும் தாய்மாருக்கு ஊட்டச் சத்துள்ள உணவுகள் வழங்குவதிலும் மற்றும் அடிப்படை வசதிகளை சீர்த்திருத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

u தோட்டங்களில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை நீக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி மற்றும் பால் ஊட்டும் தாய்மார் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகாண வேண்டும்.

u தோட்டங்களில் நிலவும் போக்குவரத்து வசதிகள் மற்றும் வைத்திய வசதிகளை சீர்செய்ய வேண்டும்.

u திருமணம் செய்து கணவன் வீட்டிற்கு வரும் பெண்கள் தோட்டங்களில் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.

u கைகாசு முறையில் தொழில் செய்யும் பெண்களுக்கு எவ்வித பிரச்சினைகளுமின்றி பிரசவ விடுமுறை வழங்க வேண்டும்.

அதே வேளையில் பெற்றோர் கவனிக்க வேண்டியவிடயங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைச் செல்வம் மிக மிக முக்கியமானதாகும். அந்தக் குழந்தை செல்வங்களை கண்ணும் கருத்துமாக கவனிப்பதும் பாதுகாப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும். அதேவளை குடும்பங்களின் வீண் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதன் மூலம் நமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

வீண் மற்றும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துக் கொள்வதன் மூலம் பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

கர்ப்பிணி மற்றும் பால் ஊட்டும் தாய்மார் கட்டாயமாக வைத்திய ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். தனியார் சிறு தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமானதாகும். இவர்கள் தொழிற்சங்கங்களில் சேர்வதற்கோ அல்லது தங்களின் குறைபாடுகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கோ பல முட்டுக்கட்டைகள் உள்ளன.

ஏனைய தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகள் வரப்பிரசாதங்கள் எட்டாக்கனியாகவும் கல்வி கேள்விகளிலும் பெரும் பின்னடைவுகள் உள்ளன. இவர்கள் இன்னும் கொத்தடிமை களாகவே உள்ளனர் என்பது மன வேதனைக் குரிய விடயமாகும்.

ஆ. முத்துலிங்கம் ...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.