புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
இலங்கையின் வறுமைக் குறைப்புக்கான புதிய பரிமாணம் ஆரம்பம்

திவிநெகும (வாழ்வின் எழுச்சி)

இலங்கையின் வறுமைக் குறைப்புக்கான புதிய பரிமாணம் ஆரம்பம்

ஜனாதிபதி மஹிந்தராஜபக்' அன்று மஹிந்த சிந்தனை தூர நோக்கு வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தனிநபர் மற்றும் குடும் பங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கிராமத்தை அபிவிருத்தி செய்து வறுமை யற்ற இலங்கையை உருவாக்குவதற்கான தேசிய அபிவிருத்திப்பணி “திவிநெகும” வேலைத் திட்டமாக உருவாக்கப்படுகின் றது. பொருளாதார அபிவிருத்தி அமைச் சர் பஸில் ராஜபக்'வின் முழுமையான ஆலோசனை, வழிகாட்டல் என்பவற்றுக்கு அமைவாக உருவாக்கப்படுகின்ற இந்த வேலைத்திட்டம் இன்று முழுநாட்டு மக்க ளினதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களம், மலைநாட்டு கமத்தொழில் மறுசீரமைப்பு திணைக்களம். ஆகிய ஐந்து நிறுவனங்களினதும் பௌதீக மற்றும் மனிதவளம்; உள்ளிட்ட அனைத் தையும் ஒன்று சேர்த்து 2013ஆம் ஆண் டின் 1ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் கிழ் இப்புதிய திணைக்களம் தாபிக்கப்படுகின்றது.

பொருளாதார அபிவிருத்தி செய் முறையை முன்னெடுத்துச் செல்வதற்;கும் வறுமையை ஒழித்து சமுதாய சமத்து வத்தை உறுதிப்படுத்துதல்”என்ற தேசிய கொள்கைக்கு பயன் கொடுப்பதற்கும் வாழ்வின் எழுச்சி பயநுகரிகளை சமுதாய அடிப்படை ஒழுங்கமைப் புக்குள் இணைத்து அவ்வமைப்புக்களை சமுதாய மட்டம் ,கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம், கிராமிய மட்டம், பிராந்திய மட்டம் மற்றும் வலயமட்ட என்பவற்றினூ டாக தேசிய மட்டம் வரை ஒருங்கிணைக் கும் ஒரு வலையமைப்பைக் கட்டியெழுப் புவதே நோக்க மாகும்.

திவிநெகும” வேலைத்திட்டத்தினூடாக எமது நாட்டின் சகல மக்களினதும் உணவுப் பாதுகாப்பு நிலையினை உறுதிசெய்து அவர்களின் வருமான மட்டத் தினை உயர்த்தி நற்பண்புகளை மேம் படுத்தி சமுக, பொருளாதார, கலாசார துறைகளில் அபிவிருத்தியை எற்படுத்தி மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் நோக்கத்தை நிறைவு செய்து இலங்கை யின் வறுமையினை 6 வீதமாக குறைப்ப தற்கு தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது.

அதே போன்று சமுர்த்தி திட்டத்துடன் இணைந்துள்ள 27000 ஆயிரம் உத்தியோ கத்தர்களினதும் தொழில்; பாதுகாப்பினை உறுதி செய்து அவர்கள் அனைவரும் ஓய்வு+தியத்துடன் கூடிய பு+ரண உத்தியோ கத்தர்களாக திவிநெகும திணைக்களத் தினுள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர் இதனால் உத்தியோகத்தர்களும் அவர்க ளது குடும்பத்தினரும் பல்வேறு நன்மை களையும் பெறவுள்ளனர்.

திவிநெகும” திணைக்களத்தினால்; மக்க ளுக்கு கிடைக்கவிருக்கும் பலாபலன்கள் என்ன அவர்கள் இத்திட்டத்தில் எவ்வாறு இணைந்து கொள்ள வேண்டும், மக்கள் கட்டமைப்புக்கள் எவ்வாறு உருவாக்கப் படவிருக்கின்றன போன்ற விடயங்கள் உள்ளடக்கியதான மக்களை அறிவு+ட்டும் வேலைத்திட்டம் இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத் தின் ஆலோசனையின் பிரகாரம் நாட்டின் சகல மாவட்டங்களிலும், கிராமிய மட்டத்தில்; மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு அறிவு+ட் டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை யின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சகல பிரிவுகளிலும் இவ் வாழ்வின் எழுச்சி வேலைத்திட் டம் மிகவும் சிறப்பான முறையில் செயற்படுத் தப்படவுள்ளதுடன்; தற் போது சமுர்த்தி திட் டத்துடன் இணைந் துள்ள 3958 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் 360000 சமுர்த்திப் பயனுகரி குடும்பங்களும் நேரடியாக நன்மை பெறவுள்ளனர்.

குறிப்பாக கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவில் வருமானம் குறைந்த 6175 குடும்பங்களும் சமுர்த்தி நலன்; உதவி பெறுகின்றனர். மேலும் 978 சிறுகுழுக்களையும், 123 சமுர்த்தி சங்கங்களையும் உள்ளடக்கிய கல்முனைக்குடி மற்றும் மருதமுனை-நட்பிட்டிமுனை ஆகிய இரண்டு வங்கிச் சங்கங்கள் உள்ளன.

இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல 5 சமுர்த்தி முகாமையாளர்களும் 49 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகதர்களும் கடமையாற்றுகின்றனர்.4575 பயனாளிகளுக்கு 750/- பெறுமதியான நலனுதவிக் கொடுப்பனவும் 1600 பயனாளிகளுக்கு 210/- பெறுமதியான நலனுதவிக் கொடுப்பனவும் சமுர்த்தி வங்கியினூடாக வழங்கப்படுகிறது.

விதவைகளுக்கான திரியபியச வீடமைப்பு வேலைத்திடத்தின் கீழ் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு சமுர்த்தி வங்கிச் சங்கக் கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஜனவரி 3ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள திவிநெகும திணைக்களம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலகத்தினூடாக சகல சமுர்த்தி சிறுகுழுக்கள், சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு சிறந்த முறையில் அவரவர் பிரிவுகளில் பொது இடத்தில் ஒன்று கூட்டப்பட்டு திவிநெகும திணைக்களம் ஸ்தாபிப்பது தொர்பான திட்டம் தொடர்பில் சிறப்பான அறிவ+ட்டல் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பிரதி ஆணையாளர் அனுருத்த பியதாச, மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ. அலியார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச செயலக சிரேஷ்;ட தiமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் அவர்களின் ஒன்று படுத்தலி;ல் சிரேஷ்;ட கருத்திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர், மகாசங்க முகாமைத்தவப் பணிப்பாளர் திருமதி பரீறா சஹீட், மருதமுனை-நட்பிட்டிமுனை வங்கி முகாமையாளர் எம்எம்.முபீன், கல்முனை வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் ஆகியோருடன் 49 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்த்கள் தங்கள் பணிகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.

கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கான நியமனக்கடிதம் வழங்கிய நிகழ்வும் அண்மையில்; (29.12.2013) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் தலைமையில் நிந்தவு+ரில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச். எம். எம். ஹரிஸ் நியமனக்கடிதங்களை வழங்கினார்.

2016ம் ஆண்டில் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் இலக்கினை அடைவதன் ஊடாக சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தி வறுமைக்;;கோட்டுக்;குள் வாழும் மக்களை சமுகத்தில் கௌரவமான பிரiஜகளாக உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

பி.எம்.எம்.ஏ.காதர்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.