புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

வாரபலன்

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
 

05.01.2014 முதல் 11.01.2014 வரை

விசேடம்
01.04.2013 திங்கட்கிழமை 3ஆம் பங்குனி விரதம்
06.04.2013 சனி கிழமை ஏகாதசி விரதம்


கிரகம் கிரகம் நிற்கும் ராசி நிலை

குரு மிதுனம்; (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம்; (நட்பு)
சூரியன் தனுசு (நட்பு)
சனி துலாம் (உச்சம்)
புதன் மகரம் (நட்பு)
சுக்கிரன் மகரம் (நட்பு)
செவ்வாய் கன்னி; (நட்பு)
சந்திரன் மகரம், கும்பம், மீனம், மேடம்


மேடம்
 

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேடராசியினர் இவ்வாரம் 10ம் இடத்து புதன் காரணமாக அதிக பணவரவுக்கு இடமுண்டு பெண்வழி ஆதரவு கிடைக்கும் குடும்ப சுகம் மேம்படும். உங்களது பயணங்களின் போது மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள் மனதில் ஒருவித தாழ்வு சிக்கல்களான எண்ணங்கள் தோன்றலாம். தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் மேலும் எதிரிகளினால் பிரச்சனைகள் ஏற்படலாம்.


இடபம்

(கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி,- மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

இடபராசியினருக்கு இவ்வாரம் 9ம் இடத்து புதன் காரணமாக திடீர் திடீர்என உடல் நலம் பாதிக்கப்படலாம். வாகனபோக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அரச பதவியில் இருப்பவர்கள் எல்லாவிடயங்களிலும் முன் கவனத்துடன் இருக்க வேண்டும். பரீட்சை வழக்கு முடிவுகள் உங்களுக்கு சந்தோ'மாக அமையலாம். பிள்ளைகளால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.


மிதுனம்

(மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பு+சம் 1ம், 2ம், 3ம், பாதம்)

மிதுனராசியினருக்கு இவ்வாரம் 8ம் இடத்து புதன் காரணமாக நீங்கள் எதிர்பார்த்த எண்ணங்கள் எல்லாம் வெற்றியளிக்கும் குழந்தை பாக்கியத்துக்கு இடம் உண்டு. ஆடை வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். நல்ல செய்தியும் வந்து சேரலாம். தாழ்மையான எண்ணங்கள் மனதில் ஏற்படலாம். அலைச்சல் கூடும். உடல் நிலை சம்பந்தமாக வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம்.
 


கடகம்
 

(புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்)

கடகராசியினருக்கு இவ்வாரம் 7ம் இடத்து புதன் காரணமாக மனைவி யுடன் மனக்கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீணான கலகத்துக்கும் இடம் உண்டு வெளியு+ர் பிரயாணம் கைகூடி வரலாம். சொத்துக்களால்; லாபம் ஏற்படும். பணவரவுக்கான வளம் மேம்படும். பகைவர்கள்;; பணிந்து விடுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறந்த நிலையில்pருக்கும் புதிய உத்தியோகம் கிடைக்கலாம்..  
 


சிங்கம்

(மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்)

சிங்கராசியினருக்கு இவ்வாரம் 6ம் இடத்து புதன் காரணமாக பரீட்சை வழக்கு முடிவுகள் வெற்றியாக அமையும். புதிய உத்தியோகம் கிடைக்கலாம். மங்களகரமான காரியங்கள் நிகழலாம். உடல் நிலை சம் பந்தமாக வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம். பகைவர்களினால் தலையீடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கலாம்.
 


கன்னி

(உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்)

கன்னிராசியினருக்கு இவ்வாரம் 5ம் இடத்து புதன் காரணமாக மனைவி பிள்ளைகளுடன் மனக்கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெண்சிநேகிதர்களின் நட்;பு தலையிடிகளை தோற்றுவிக்கலாம். உடல் நலம் சம்பந்தமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் சுமுகமாக தீர்ந்து விடும். குடும்பத்தில் மங்களகரமான காரி யங்கள் நிகழலாம்.
 


துலாம்

(சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்)

துலாராசியினருக்கு இவ்வாரம் 4ம் இடத்து புதன் காரணமாக எதிர்பாராத வண்ணம் போதியளவு பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய அரசாங்க பதவி கிடைக்கலாம். சமூகத்தில் கௌரவம் உயரும். பணவருவாய் மேம்படும். பகைவர்கள் பணிந்து விடுவார்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். அரச பதவியில் உள்ளவர்கள் எல்லா விடயங்களிலும் மிகவும் நிதானத்தடன் இருக்க வேண்டும்.


விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை)

விருச்சிகராசியினருக்கு இவ்வாரம் 3ம் இடத்து புதன் காரணமாக அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் முன் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளின் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். அளவுக்கு மீறிய செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். உடல் நிலை சம்பந்தமாக வைத்திய சிகிச்சை பெறவேண்டியிருக்கும். தேவையில்லாத அவப்பெயர் கேட்க நேரிடலாம்.
 


தனுசு

(மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்)

தனுசு ராசியினருக்கு இவ்வாரம் 2ம் இடத்து புதன் காரணமாக தேவை யில்லாத பெயர் கேட்க வேண்டியிருக்கும் கோப உணர்வு கூடும். தாழ்ந்த மனபாங்கு இருக்கும். உங்களுக்கு சமூகத்தில் இருக்கின்ற கௌரவம் பாதிக்கப்படலாம்; போக்கு வரத்து அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் நிலமை பாதிக்கப்கடலாம். இனசன உறவு கொண்டாட்டம் குறையலாம். தூரதேச பிரயாணம் கைகூடி வரலாம். கட்டுக் கடங்காத செலவுகளும் இருக்கும்.
 


மகரம்

(உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்)

மகரராசியினருக்கு இவ்வாரம் 1ம் இடத்து புதன் காரணமாக உறவினருடன் மனமுறிவு ஏற்படலாம். வெளியு+ர் பிரயாணம் கைகூடி வரலாம். எதிர்பாரத வண்ணம் போக்குவரத்து ஏற்படலாம். கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படலாம். பரீட்சை வழக்கு முடிவுகள் நீங்கள் எதிர் பார்க்கும் வண்ணம் நல்ல பலனை தாராது எதிரிகள்;; தொந்தரவு இருக்கும். உடல் நலம் சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெறநேரிடலாம்.
 


கும்பம்

(அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பு+ரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்)

கும்பராசியினருக்கு இவ்வாரம் 12ம் இடத்து புதன் காரணமாக நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது. எதிரிகளின் தொந்தரவு இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சந்தர்ப்பம் உண்டு. தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். நீங்கள் ஈடுபடுகின்ற தொழில் துறைகளால் அதிக நன்மைகள் ஏற்படும். அரசாங்கத்தின் உதவிகளும் வந்து சேரலாம். குடும்பத்தால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். மங்களகரமான காரியங்கள் நிகழலாம்.


மீனம்

(பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

மீனராசி;யினருக்கு இவ்வாரம் 11ம் இடத்து புதன் காரணமாக மனைவி யினாலும் பிள்ளைகளினாலும் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீங்கள் எண்ணுகின்ற காரியங்கள் எல்லாம் உங்களால் செயற்படுத்த கூடியதாக அமையும். நீங்கள் செய்கின்ற தொழில் துறைகளால் நன்கு பணவரவு கிடைக்கும். பெண் நண்பர்கள் உதவி செய்வார்கள். மங்களகரமான காரி யங்கள் வீட்டில் நிகழலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.