ஹிஜ்ரி வருடம் 1432 ரமழான் பிறை 02
கர வருடம் ஆடி மாதம் 18ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, AUGUST 03, 2011
வரு. 79 இல. 182
 

நாக்கு பேசுமா?

நாக்கு பேசுமா?

நாக்கு இல்லா விட்டால் பேச்சு வராது. ஒரு வினாடிக்கு 500 முதல் 2,000 வரையிலான ஒலி அலைகளை வெளிப்படுத்தும் சிறப்பினைக் கொண்ட நாக்கு பேசித் தள்ளுகிறது பல சொற்களை. ஒரு நிமிடத்துக்கு 160 சொற்களைக் கூட வன்மையுள்ள நாக்கு பேசிவிடும். இந்த நாவன்மை கொண்ட நாக்கின் மையப் பகுதியின் பெயர் என்ன தெரியுமா? அது அமைதி மண்டலம் என்பதாகும்.

ஏன் என்றால் அங்குப் பேச்சலைகளை வெளிப்படுத்தும் சக்தி குறைவு என்பதோடு சுவை உணரும் அரும்புகளும் இல்லை, மேலும் நாக்கைப் பற்றிய பரம இரகசியம் ஒன்று என்னவென்றால் உண்மையிலேயே நாக்கு பேசுவதில்லை. பேச்சு தொண்டைக் குழியில் இருந்துதான் வருகின்றது என்பதோடு அந்தப் பேச்சின் அலைகளை புரட்டி வெளிக்கொண்டு வந்து சப்தமாக, சொற்களாக வெளியிடும் ஒழுங்கீட்டுச் செயலைத்தான் நாக்கு செய்கின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி