ஹிஜ்ரி வருடம் 1432 ரமழான் பிறை 02
கர வருடம் ஆடி மாதம் 18ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, AUGUST 03, 2011
வரு. 79 இல. 182

கொழும்பில் செனல் - 4க்கு எதிராக
ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மீது திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சனல்- 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை ஊடகவியலாளர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று நண்பகல் நடந்த இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர வெகுசன ஊடகவியலாளர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்க மற்றும் தனியார் துறை பத்திரிகை மற்றும் இலத்திரனியில் ஊடகவியலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சனல்-4 தொலைக்காட்சி . . .

விவரம் »

தேசிய விவசாய தகவல் பரிமாற்றல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பேன்.
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

6.31
4.28
   

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்தோரை மலேஷியா அனுப்ப முடிவு: நேற்று அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக குடியேறி வந்த ஒரு தொகுதியினர் விரை வில் மலேஷியா அனுப்பப்படவுள்ளதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோரை மலேஷியாவுக்கு அனுப்புவது தொடர்பான உடன்படிக்கை அண்மையில் இரு நாடுகளுக்கு மிடையே கைச்சாத்தி டப்பட்டது. பணம் சம்பாதிக்கும் நோக்குடன் சில முகவர்கள் இவ்வாறு மக்களை சட்ட விரோத குடியேற்றத்துக்கு அழைத்து வருகின்றனர்.

     விவரம் »

கொழும்பு மயூரபதி அருள்மிகு பத்திரகாளி அம்மன் தேவஸ்தான ஆடிப்பூர பாற்குட பவனி பம்பலப் பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது இதில் பிரதமர் தி. மு. ஜயரட்ன, சப்பிரகமுவ மாகாண ஆளுநர் லொக்குபண்டார ஆகியோர் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். (படம்: நிசங்க விஜயரட்ன)

இத்தாலிக்கு படகில் சென்ற 25 பேர் மூச்சுத்திணறி மரணம்

இத்தாலியில் குடியேற சென்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க கண்டத்தில் உள்ள லிபியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு வருவதையடுத்து அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதேபோன்று லாம்பிடுஸ் என்னும் தீவுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இத்தாலியில் குடியேறுவதற்காக படகு ஒன்றில் புறப்பட்டனர்.

விவரம் »

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞா. குகநாதன் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நேற்று ஊடக அமைப்புகள் கொழும்பு லிஃப்டன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.



படம்:
சுலோசனா கமகே