ஹிஜ்ரி வருடம் 1432 ரமழான் பிறை 02
கர வருடம் ஆடி மாதம் 18ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, AUGUST 03, 2011
வரு. 79 இல. 182
 
மொழி உரிமையும் இலங்கையின் மொழிக்கொள்கையும்

மொழி உரிமையும் இலங்கையின் மொழிக்கொள்கையும்

யசோதரா கதிர்காமத்தம்பி
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.

மொழி என்பது தனிப்பட்ட மற் றும் கலாசார அடையாளத்தினை அங்கீகரிப்பதில் முக்கிய இடத் தைப் பெறுகின்ற ஒரு சாதனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனிதன் தனது உணர்வுகளையும், விருப்பங்களையும் கருத்துக்களை யும் வெளியிடுவதற்கு மொழி பிரதான களத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதனை மேலும் வலுவாக எடுத்துக் கூறினால், 'பேச்சு மற்றும் கருத்துத் தெரி விக்கும் சுதந்திரம்' (குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனம் (1966) உறுப் புரை 14) என்பவற்றை உறுதிப் படுத்துவதில் மொழி தனக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், தொடர் பாடலுக்குரிய பொது மொழி எதுவென்ற வினா எம்மிடையே எழக்கூடும்.

இதற்குரிய காரணம், மனிதன் என்பவனுக்கு எந்தவித வேறுபாடுகளும் இன்றி சகல உரிமைகளுக்கும் அவன் உரித் துடையவன் எனப் பொதுவாக கூறிவந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் இடையேயுள்ள சில உரிமைகள் அவனுடைய மதம், இனம், கலாசாரம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன என்பதை அகில மயமாக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் ஆவணங்கள் ஏற்றுக்கொண்டுள் ளன. மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடன (1948) த்தின் முகவுரை 'மனித குடும் பத்தின் உறுப்பினர்கள் அனைவரி னதும் சமமான மற்றும் பாரதீனப் படுத்த இயலாததுமான உரிமை களையும், உள்ளார்ந்த கௌர வத்தையும் அங்கீகரித்தல் உல கின் சுதந்திரம், நீதி மற்றும் சமா தானத்திற்கு அடித்தளமாகும்; என பிரகடனப்படுத்துகின்றது.

அனைத் துலக பிரகடனத்தையும் அதனைத் தொடர்ந்து வந்த மனித உரிமைகளை மேம்படுத்தவும் பேணிப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட சமவாயங்களும், பிரகடனங்களும் மொழியுரிமை பல்வேறு வடிவங்க ளில் ஏற்று அங்கீகரித்துள்ளன. பல்லின சமூகத்தை, கலாசார த்தை அமைப்பைக் கொண்ட இலங்கையும் பெரும்பாலான சர்வதேச மனித உரிமைகள் ஆவணங்களை ஒப்புறுதி செய்து அவற்றை நாட்டில் அமுல்படுத்து வதற்குரிய கடப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, பல்லின மற்றும் பல மதங்களையும், கலா சார அமைப்புக்களையும் கொண்ட நாட்டில் சுதந்திரம், சமாதானம், அமைதியைப் பேணுவதற்கு மொழிக் கொள்கையை வினைத்திறனுடன் அமுல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பன்மைத்துவ மதம், கலாசாரம், இனம் என்பவற்றிற்கான அங்கீகாரம்

புவியியல் ரீதியில் இலங்கை ஒரே நாடு. மேலும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் ஒரே அரசு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. எந்தவொரு நாட்டி லும் புவியியல் ரீதியாக ஒரு அரசு இருந்த போதிலும், மக்களு டைய பழக்கவழக்கங்களையும், தனித்துவ பண்புகளையும், மொழிகளையும் அடிப்படையாகக் கொண்ட சமூகங்கள் இருந்து வருவதை மனித சமூகம் காலா காலமாக ஏற்றுக்கொண்டுள்ளது டன், என்றைக்குமே இப்பண்பை முற்றுமுழுதாக அழித்துவிட முடியாது.

1978 ஆம் ஆண்டு இரண்டா வது குடியரசு அரசியலமைப்பு உறுப்புரை 12 'அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் சமம் என்பதுடன், சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர் கள்' எனவும் 12(2) 'எந்தவொரு பிரiஜயும் இனம், மதம், மொழி, சாதி. பால், அரசியல் கொள்கை, பிறப்பிடம் அல்லது அத்தகைய ஏதேனும் காரணங்களின் அடிப்ப டையில் பாரபட்சம் காட்டப்படல் ஆகாது' என ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இங்கு பாகுபாட்டிற்கோ அல் லது பாரபட்சத்திற்கோ உள்ளாக் கப்பட முடியாத காரணங்களில் இனம், மதம், மொழி என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. எனவே, இலங்கை பல்லின, பல்மத, பல மொழிகளைக் கொண்ட ஒரு தேசம் என்பது அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மேலே குறிப்பிடப்பட்ட காரணங்க ளின் அடிப்படையில் நிர்வாக நிறைவேற்றுத் துறையினால் எந்தவொரு பிரiஜயும் பாரபட்ச மாக நடத்தப்படுகின்ற போது பாதிக்கப்பட்ட நபர் அரசியலமை ப்பின் நபர் உறுப்புரை 126 இன் கீழ் உயர் நீதிமன்றத்தில் அடிப் படை உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்து பரிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வழிசமைத்துள் ளது. ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கருத்தேற்புக்கு மேலும் வலுவ+ட்டும் வகையில், எந்த வொரு இனத்தை அல்லது மொழியைச் சார்ந்த சமூகமாக இருப்பினும் 'இலங்கையின் பிரiஜ' என்ற உணர்வு எம்மி டையே ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்ப துடன், அரசியலமைப்பு அதனை உத்தரவாதப்படுத்துகிறது.

அரசி யலமைப்பு உறுப்புரை 12(3) எந்தவொரு நபரும் இனம், மதம், மொழி, சாதி, பால் அல்லது அத்தகைய ஏதேனும் காரணங் களின் அடிப்படையில் கடைகள், பொது உணவுச்சாலைகள், ஹோட்டல்கள், பொது களியாட்ட இடங்கள் மற்றும் தனது சொந்த மதத்தை, அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான தகைமைகளை இழக்கச் செய்தல் கூடாது என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வுறுப்புரையும், இலங்கை பல மத, இன, கலாசார அமைப்பைக் கொண்ட ஒரு சமூகம் என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது. இவ்வாறான சமூக அமைப்பில் அமைதி, சமாதானத்தைப் பேணு வதாக இருந்தால் சமூகங்களி டையே புரிந்துணர்வு அவசியம் என்பதுடன், அப்புரிந்துணர்வு மூலம் ஏனையோருடைய உணர்வு களுக்கும், கலாசாரத்திற்கும் மதிப்பளித்தல் வேண்டும்.

விரும் பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை யுண்டு. இவ்வுரிமை சர்வதேச மனித உரிமையொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 1966 ஆம் ஆண்டு குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாச னத்தின் உறுப்புரை 18 இவ்வுரி மையை அங்கீகரித்துள்ளது. இவ்வுறுப்புரையைத் தொகுத்து நோக்கும் போது, உலக நாடுகளில் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருப்பதுவும், எந்தவொரு மனிதனும் தனக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமையுண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு உறுப்பு நாடும் தத்தமது நாட்டில் இவ்வுரி மைகளுக்கு எவ்வித இடைய+றும் இல்லாமல் அவற்றை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

இவ் விடயத்திற்கு மேலும் விசேட அவதானம் வழங்கி சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகளை 1992 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையும் தேசிய அல்லது இன, மத மற்றும் மொழி ரீதியான சிறுபான்மை சமூ கத்தைச் சார்ந்த ஆட்களுக்கான பிரகடனத்தின் உறுப்புரை 01 ஒவ் வொரு உறுப்பு நாடும் தத்தமது ஆட்புல எல்லைக்குள் தேசிய, இன, கலாசார, மத மற்றும் மொழிரீதியான சிறுபான்மையினரு டைய அடையாளத்திற்கு மதிப்பளி ப்பதுடன் அவர்களுடைய தனித்து வத்தையும், அடையாளங்களையும் பேணுவதற்குரிய பொருத்தமான சட்ட மற்றும் ஏனைய வழிமுறை களை மேற்கொள்ள வேண்டுமெ னக் குறிப்பிடுகின்றது.

மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வகையைச் சார்ந்த சிறுபான்மையினராக வாழும் மக்கள் தமது தனித்துவ அடையாளங்களைப் பேணுவதற் குரிய அவசியமான அமைப்பு களை உருவாக்கவும், ஏனைய மக்களுடன் உறவாடி அதன்மூலம் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடு களில் பங்குபற்றவும் உரிமையு ண்டு என பிரகடனப்படுத்துகிறது. இங்கு முக்கியமான விடயம் யாதெனில், பன்மைத்துவ நாடு ஒன்றில் ஒவ்வொரு சமூகத்தினரு டைய தனித்துவம் பேணப்படுகின்ற அதேவேளையில், நாட்டின் பிரதான அபிவிருத்திச் செயற்பாடு களில் இச்சமூகங்கள் தமது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் பல இன, மத, கலாசாரம் சார்ந்த சமூகங்கள் இருந்த போதிலும் இச்சமூகங்களால் பயன்படுத்தப் படுகின்ற பிரதான இரு மொழிகள் சிங்களம் மற்றும் தமிழ் ஆகும். இந்த ஆவணம், அரசுக்கு முக் கிய கடப்பாடு ஒன்றைச் சுமத்து கின்றது. இக்கடப்பாட்டின் பிரகாரம் அரசு நிர்வாக, சட்டவாக்கம் நீதித் துறை ஆகிய மூன்று துறைகளின் ஊடாக நடைபெறுகின்ற அனை த்து அரச கருமங்களிலும் இரு மொழி சார்ந்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களுடைய உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் அமைதி, சமாதா னம் என்பனவற்றை நிலைநிறுத்த வேண்டும்.

இலங்கையை எடுத்துக்கொள் ளும் இலங்கை என்பது ஒரே தேசமாயின் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல மதங்களைக் கொண்ட தேச மாகும். இவற்றைத் தவிர பன் மைத்துவ கலாசாரங்களை மேலும் நிலைநிறுத்தும் பொருட்டு ஆள்சார் அல்லது சுதேச சட்டங் கள் திருமணம், வழியுரிமை, மகவேற்பு ஆகிய விடயங்களை ஆளும் கலாசார அல்லது சம்பிரதாய ரீதியான சடங்குகளையும், நடைமுறை ஏற்றுக்கொண்டுள்ளன. உதாரணமாக, கண்டியர்களுடைய ஆதனம், வழியுரிமை என்பன கண்டியச் சட்டத்தின் கீழ் ஆளப் படுவதுடன், கண்டியச் சட்டத்தின் திருமணத்திற்கான சம்பிரதாய சடங்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளன. வட மாகாண தமிழர்களின் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்ட தேசவழமைச் சட்டம் வட மாகாண தமிழர்களின் சொத் துக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சிறப்பான ஏற்பாடுக ளைக் கொண்டுள்ளன.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் முஸ்லிம்களுடைய திருமணம், விவாகரத்து, ஆதனம், வழியுரிமை போன்ற விடயங்கள் ஆளப்படுகின் றன. பல கலாசாரங்களை சட்ட ரீதியாக அங்கீகரித்து இருக்கின்ற மேலதிக விடயங்களை இங்கு அவதானிப்போமாக இருப்பின் இலங்கையில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 என சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக் கிறது. எனினும் முஸ்லிம் சட்டத் திற்கு இவ்வேற்பாடு விதிவிலக் காக அமைகிறது. இதன்மூலம் தெளிவாவது என்னவெனில், பல மதங்களைக் கொண்ட நாடாகிய இலங்கையில் ஏனைய மதங்க ளின் நம்பிக்கைகளும், சம்பிரதாய ங்களும் கௌரவமளிக்கப்படுவ தாக அமைகின்றது.

திருமணம் தொடர்பான விடயங் களை எடுத்துக்கொள்கின்ற போது பிரித்தானிய ஆட்சியின் கீழ் திரு மணம் பதிவு செய்யப்பட வேண் டும் என்ற ஏற்பாடுகள் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும், வழக்காற் றுத் திருமணங்கள் இலங்கையில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளன. வட மாகாண இந்துக் கள் ஐயர் முன்னிலையில் மஞ் சள் துண்டொன்றைக் கழுத்தில் கட்டி மேற்கொள்ளப்படும் திரு மணம், கண்டியச் சிங்களவர்களின் போருவ வைபவம், இஸ்லாமியர் களின் நிக்காஹ் சடங்குகள் என் பன ஏற்றுக்கொள்ளப்பட்ட திரு மணங்களாகும்.

மேலும் ஒருவரின் இறப்பின் பின்னர் அவருடைய சொத்துக்கள் மரபுரிமையாளர்களு க்கு சென்றடைதல் தொடர்பாக அந்தந்த சமூகத்தினரால் பின்பற் றப்பட்ட கலாசார முறைகள் ஏற் றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவை யாவற்றையும் அவதானிக்கின்ற போது இலங்கை பல கலாசார, இன, மதங்களை காலாகாலமாக ஏற்றுக்கொண்ட நாடு என்பது அர சியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளது.

இத்தகைய பல சமுகங் களைக் கொண்ட சமூகத்தில் ஒற்றுமையையும் புரிந்துணர்வை யும் பேணுவதற்கு தொடர்பாடல் என்பது அத்தியாவசியமான ஒன் றாக இருக்கின்றது. அத்தகைய தொடர்பாடலை ஏற்படுத்த மொழி ஒரு சாதனமாக அமைகின்றது. அதற்கு எந்த மொழிகளைப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு பிரiஜக்கும் உண்டு.

இலங்கை யில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டும் பிரதான மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆங்கி லம் இணைப்பு மொழியாகப் பய ன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழியின் பயன்பாடு, இனங்க ளுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு ஊடகமாக அமைகின்றது.

உதாரணமாக, சிங்களம் பேசுபவர்கள் அல்லது தமிழ் பேசுபவர்கள் சாதாரண பேச்சுவழக்கிலும் சில நேரங்களில் அலுவலக ரீதியான கடமைகளி லும் ஆங்கில வார்த்தைகளைப் பிரயோகிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக வந்துள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழி கொள்கையை அங்கீகரித்துள்ள அதேவேளையில் ஆங்கில மொழி யின் அவசியத் தன்மையை நாம் உணர்ந்து அதனை நடைமுறைப் படுத்த வேண்டும்.

உலக மயமாக் கலின் விளைவாக ஒரே நாடு என்ற கருத்தேற்பு இருந்த போதிலும், பொருளாதார சமூக அரசியல் நடவடிக்கைளை ஒரு நாடு தனித்து செயற்பட இய லாது. எல்லா விடயங்களுக்கும் ஏனைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை உலகின் அனை த்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு அம்சமாகும். ஆகவே, சர்வ தேச தொடர்பாடலுக்கு ஆங்கிலம் உறுதுணையாக இருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

சமூக ஒருமைப்பாட்டிற்கு மொழி ஆற்றுகின்ற பங்களிப்பு

காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கையின் நிர்வாக மொழியா கவும், நீதிமன்றத்தின் மொழியா கவும் ஆங்கில மொழி பயன்படுத் தப்பட்டு வந்தது. நன்கு ஒழுங்க மைக்கப்பட்ட கல்வி முறைமை மூலமாக காலனித்துவ ஆட்சியா ளர்கள் நிர்வாக முறைமை மற் றும் வர்த்தகத்துறை என்பவற் றுக்கு ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்ற ஆட்களை உரு வாக்கினர். அக்காலப்பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மொழி பேசுபவர்களிடையே ஒற்றுமை நிலவியது.

எனினும், காலப்போக் கில் சிங்கள மொழி அரசகரும மொழியாகவும் நிர்வாக மொழியா கவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் முகமாக பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உணர்வை மாற்றி சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் நிர்வாக மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. உதாரண மாக, 1932 ஆம் ஆண்டு ஜ{லை மாதம் அரச பேரவையில் மாத்த றையைச் சார்ந்த உறுப்பினர் அரச பேரவைக்கு ஒரு அறிவித் தலை வழங்கினார்.

அதன் பிரகாரம் இலிகிதர் சேவையில் ஆட்களைச் சேர்த்துக் கொள்ள அவ்வாட்கள் சிங்கள அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக் வேண் டும் என்ற கோரிக்கை முன்வைக் கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் எந்தவொரு சிவில் அல்லது இலிகிதர் சேவையை சர்ர்ந்த அலுவலர் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தேர்ச்சி பெறாதவிடத்து பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது எனவும் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட் டது. எனினும், அரச பேரவை 1935 ஆம் ஆண்டு கலைக்கப்பட் டதுடன் இந்த விடயம் ஒருபோதும் செயற்பாட்டிற்கு வரவில்லை.

இத னைத் தொடாந்து 1943 ஆம் ஆண்டு Nஜ.ஆர்.ஜயவர்தன அவர் களால் சிங்களம் அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென சிபார்சு செய்யப்பட் டதுடன், அனைத்து பாடசாலை களிலும் சிங்களம் கல்வி மொழி யாக வருவதுடன், அனைத்து பகிரங்க பரீட்சைகளிலும் சிங்க ளம் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். சிங்கள மொழி சட்ட வாக்க மொழியாகவும் பயன்படுத் தப்பட வேண்டுமென முன்வைக் கப்பட்டது. மேலும் அனைத்து முக்கியமான புத்தகங்களும் சிங்கள மொழியில் மொழிபெயர்க் கப்பட வேண்டும் எனவும் ஆங்கி லத்தில் இருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்ப்பதற்காக ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண் டும் எனவும் சிபார்சு செய்யப் பட்டது.

இதனைத் தொடர்ந்து திருகோணமலை - மட்டக்களப்பு உறுப்பினரான திரு.நல்லையா அவர்களால் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மேலே சொல்லப்பட்ட நோக்கத்திற்காக அதாவது Nஜ.ஆர்.ஜயவர்தன அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மாற்றீடாக பயன் படுத்தப்பட வேண்டும் என முன் மொழியப்பட்டது. இதற்கு பெரி யளவில் எதிர்ப்புகள் இருக்கவில்லை. இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டே Nஜ.ஆர். ஜயவர்தன அவர்களின் தலைமையின் கீழ் குழுவொன்று தாபிக்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி