புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

மைக்ரோசொவ்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிட முகாமையாளராகும் Brian Kealey

மைக்ரோசொவ்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிட முகாமையாளராகும் Brian Kealey

மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளராக வர்த்தகத் துறையில் அனுபங்கள் மற்றும் சிறப்புத் தேர்ச்சி கொண்ட அவுஸ் திரேலியரான Brian Kealey நியமிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோ சொவ்ட் நிறுவனம் அறிவித்துள் ளது. அதன்படி அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான வதிவிட முகாமையாளராக செப்டெம்பர் 01 2015ஆம் திகதி முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் முக்கிய மான வர்த்தக மற்றும் பாவனையாளர் உற்பத்திகளை தயாரித்தல், சேவை வழங் கல்கள், நிறுவனத்தின் நன்மதிப்பு, நிறுவ னத்தின் செயல்திறன், வாடிக்கையாளர்கள் மற்றும் இருதரப்புக்கும் இடையிலான பங்கு தாரர் அனுபவங்கள் ஆகிய அனைத்து செயற்பாடுகளையும் புதிய வதிவிடப் பிரதி நிதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Brian Kealey கடந்த 17 வருடங்களாக பல்வேறு தொழில்நுட்ப ரீதியில் அனுபவங்க ளைக் கொண்டவர் எனவும், தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள மைக்ரோசொவ்ட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கியுள்ளமை மட்டுமன்றி, பல்வேறு முக்கியமான பொறுப் புக்களையும் வகித்ததோடு தலை மைப் பொறுப்பை சிறப்பாக வகிக்ககூடியநபர் ஒருவர் என மை க்ரோசொவ்ட் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசியாவின் பொது முகாமையாளர் மிச்செல் சீமென்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் புதிய தொரு ஆரம்பமாக அவுஸ்திரேலி யாவில் இரு மைக்ரோசொவ்ட் கண்டுபிடிப்புமையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதன் ஊடாக புதியதொழில் முனை வோர் மற்றும் புதிய படைப்புக்கள் மீது கவனம் செலுத்தும் மாணவ குழந்தைகளு க்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய கண்டுபிடிப்பு மையங்கள் ஊடாக ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர் மற்றும் மாணவ குழந்தைகளுக்கு பயற்சிகள் வழங்கப்படு வதுடன் அதனூடாக புதியதொழில்வாய்ப்பு க்களையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரு அடித்தளமாக அமையும். புதிய வதிவிட முகா மையாளராக நியமிக்கப்பட்டுள்ள முநயடநல கருத்து தெரிவிக்கையில், இந்த புதிய நியமிப்பு எனக்கு கிடைத்தமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையிலுள்ள அனுபவம் வாய்ந்தகுழுவு டன் சேர்ந்து சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தமை பெரும் பாக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.