புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

ஆங்கிலேயர் ஆட்சியில் புழக்கத்திலிருந்த தாள் நாணயங்கள்

ஆங்கிலேயர் ஆட்சியில் புழக்கத்திலிருந்த தாள் நாணயங்கள்

பிரித்தானியர் 1796-1948 வரை சுமார் 152 ஆண்டுகளாக இலங்கையை ஆட்சி செய்தபோது பலவித அபிவிருத்திகளை இந்நாட்டில் மேற்கொண்டனர். இதில் வங்கிமுறையையும் பண வெளியீடுகளும் முக்கிய மானதாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார வளத்திற்கு இவர்களின் பங்களிப்பு மிகையான தாகும்.

1915 முதல் 1929ம் வரை புழக்கத்தி லிருந்த ஒரு ரூபா நாணயத்தாள்

1825ம் ஆண்டின் 8ம் இலக்க விதிகளின் பிரகாரம் பிரித்தானிய அரசு இலங்கையின் கணக்கு நடவடிக்கைகள் பவுண் சில்லிங் பென்ஸ் வடிவில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1827ஆம் ஆண்டின் 8ம் இலக்க விதிகளின் படி அரச நாணயத்தாள்கள் 1.2.5.10.20.25.50 பவுண் பெறுமதியில் வெளியிடப்பட்டன. இந்த நாணயத்தாள்கள் லண்டன் பேர்சின் பேகோன் , பெட்ஸ் அச்சகங்களில் அச்சிடப்பட்டன. இந்நாணயத்தாள்களில் இரு அதிகாரம் பெற்ற அலுவலர்களின் கையொப்பங்கள் காணப்படுகின்றன.

1941ல் வெளியிடப்பட்ட ஆறாவது ஜோர்ஜ் மன்னின் உருவம் பொறித்த ஒரு ரூபா நாணயத்தாள்

1827 முதல் 1855 வரை 1.2.5. பெறுமதியான பவுண் நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டன. 1870ல் சார்டட் மேர்கண்டைல் பேங்க் ஒப் இந்தியா சைகளை 1.5.10.50 பவுண் பெறுதியிலான தாள் நாணயங்களை வெளியிட்டது. ஒருபவுண் 10 ரூபாவாகக் கணிப்புச் செய்யப்பட்டது. மேலும் இவ்வங்கியால் 1870 கண்டி, கொழும்பு, காலி வெளியீடாக 10 சிலிங் பெறுதியான நாணயத்தாள்கள் வெளியிடப்பட்டன. அதையடுத்து ஒரியண்டல் வங்கி கண்டி, பதுளை, காலி, கொழும்பு வெளியீடாக 5 ரூபா, 10 ரூபா நாணயத்தாள்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆசியாடிக் வங்கிக் கேப்ரேஸனால் கண்டி வெளியீடாக 10 சிலிங் 5 ரூபா, 1 பவுண் 10 ரூபா பெறுமதியில் தாள் நாணங்களை வெளியிட்டது.

1942 ல் வெளியிடப்பட்ட துணை நாணயத்தாள் 5 சதம் மற்றும் 10 சதம் பெறுமதி கொண்டவை.

1885ல் இலங்கை அரசாங்கம் 5 ரூபா நாணயத்தாளை அறிமுகஞ்செய்தது. 1915முதல் 1929ம் வரை 1,2,5,10,100, 500, 1000 ரூபா பெறுமதியான தாள் நாணயங் களை வெளி யிட்டது. 1941ல் 6ம் ஜோர்ஜ் மன்னரின் உருவம் தாங்கிய 1,2,5, 10,50,100.1000ம் ரூபா பெறுதியான தாள்நாணயங்களும் 1947ல் 10000 ரூபா பெறுதியான நாணயத்தாளும் வெளியி டப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது 10.25.50 சதம் பெறுமதியான நாணயத்தாள்களும். அவசரநிலை நாணயமாக 5,25,50, சத நாணயத்தாள்களும் வெளியிடப்பட்டன. இந்த 5 சத நாணயத்தாள் 3 சதம் 2சதம் பெறுமதிகொண்டது. தேவைக்கேற்ப கிழிக்கத்தக்கதாக இருந்தது.
 

கம்பளை கே. ஏ. அலீம்

பொது அறிவுச் சாகரம்

* இலங்கை முத்திரை வெளியிட்டு 150 ஆண்டு நிறைவு 2007 ஏப்ரல் 01ம் திகதி கொண்டாடப்பட்டது. இலங்கையின் 01வது முத்திரை வெளியீடு இடம்பெற்ற ஆண்டு? 1857

* 2007 ஒக்டோபர் மாதம் காட்டுத்தீயால் அழிவை எதிர்நோக்கிய அமெரிக்க மாநிலம் எது?

கலிபோர்னியா.

* 2008ம் ஆண்டு 15ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெற்ற நாடு எது? இலங்கை

* சார்க் அமைப்பில் 8ஆவது நாடாக இணைந்து கொண்ட நாடு எது? ஆப்கானிஸ்தான்

ஆட்டோ!

ஆட்டோ பெரிய ஆட்டோ
பயணம் செய்திடும் ஆட்டோ
ஊருக்கு அழைத்திடும் ஆட்டோ
உல்லாசம் கொடுக்கும் ஆட்டோ

சாலையில் விரையும் ஆட்டோ
சத்தம் போடும் ஆட்டோ
காலை மாலை பாராமல்
கடுகி ஓடும் ஆட்டோ

இருக்கைகள் நிறைந்த ஆட்டோ
இயக்க எளிதாம் ஆட்டோ
தடைகள் எத்தனை வந்தாலும்
தகர்த்து ஓடும் ஆட்டோ,,

ஸாதிக் பாரிஸ்,

மள்வானை.


|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.