புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 

இரத்மலானை இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை

தோட்ட உத்தியோகத்தர்களுக்கு 10 பேர்ச் காணியை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

அமைச்சர் மஹிந்த சமரசிங்க

நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது தேயிலை, இறப்பர் ஆகும். இவற்றை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அந்நிய செலாவணியை ஈட்டு வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களு மாகும். 30, 40 வருடங்கள் தோட்டங்களில் சேவையாற்றி ஓய்வு பெற்ற பின் சொந்த வீடோ காணியோ இல்லாமல் உறவினர்களின் வீடுகளிலும் கூலி வீடுகளிலும் வாழும் நிலை யில் அநேகமான தோட்ட உத்தியோகஸ் தர்கள் இருக்கிறார்கள்.

தோட்ட உத்தியோகஸ்தர்களை அதிகளவு அங்கத்தினர்களைக் கொண்ட தொழிற்சங் கமான இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் கடந்த 30 வருடங்களாக உத்தியோகஸ்தர் களுக்கு காணியை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

2002ம் ஆண்டு தொழில் அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக வருகை தந்த போது சேவையாளர் காணிப்பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அவரின் முயற்சியால் பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சங்கத் தின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கென காணித்துண்டு கொடுக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் உத்தியோகஸ்தர்களுக்கு காணி பெற்றுக் கொடுப்பதற்கு நிபந்தனைகள் வித்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் இது சம்பந் தமாக உத்தியோகஸ்தர்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக கடந்தாண்டு அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் களுத்துறை, அகலவத்தை பிரதேசசபை கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களிலுள்ள உத்தியோகஸ் தர்கள் கலந்து கொண்டனர். மலையகத்திலுள்ள உத்தியோகஸ்தர்களுக்கு இதுதொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் சந்திப்பொன்றை கடந்த 18.01.2014 தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இலங்கை தோட்ட சேவையாள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமைச்சர் மகிந்த சமரசிங்க கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் பெருந்தோட்டங்களில் சேவையற்றும் உத்தியோகஸ்தர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களுக்கு குடியிருப்பதற்கு காணித்துண்டு இல்லாமல் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். இது சம்பந்தமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆசீர்வாதத்துடன் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு 10 பேர்சஸ் காணித்துண்டு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் முதற்கட்டமாக நுவ ரெலியா மாவட்டத்தில் எடின்பரோ தோட் டத்தில் இவர்களுக்கு காணி வழங்குவதற்கு தோட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோன்று ஏனைய பகுதிக ளிலும் தோட்ட அதிகாரிகள் காணிகளை ஒதுக்கினால் மகிந்த சிந்தனையின் கீழ் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய சட்ட பூர்வமாக வேலையை ஆரம்பிக்கமுடியும். இதற்கு தோட்ட சேவையாளர் சங்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இப் பிரச்சினை தொடர்பாக சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அழைத்து சென்று ஜனாதிபதியை சந்தித்து உங்களின் ஏனைய பிரச்சினைகளையும் தீர்வு காண் பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.