புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 

நீலாம்பரி

நீலாம்பரி

முகில்வண்ணன்

(சிறுவர் நவீனம்)

“நான் இதை நாகலோகத்தில் பாவிப்ப தற்காகவே கொண்டு வந்தேன். ஆனால் இங்கும் பாம்புகள் உள்ளதால் இதைக் கட்டிவிட்டேன்” என்றவள் தானும் கட்டிக் கொண்டாள். அதன் பின்னர் அவர்கள் கீழிறங்கி நடந்த போது அது உண்மை என்பதைப் புரிந்து கொண்டான்.

அப்போது பாம்புகள் பற்றி பல விடயங்களை அவனுக்குச் சொன்னாள். பாம்புகள் ஆபத்தா னவை அல்ல என்றும் அவை தமது பாதுகாப் புக்காகவே பிறரைத் தாக்குகின்றன. மற்றும் படி தமது உணவுக்காக தாக்குகின்றன. மனிதர்களை அவை தாக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் அவற்றுடன் நட்புடன் பழகினால் அவை நமக்கு ஏதும் செய்யாது.

“முன்னர் பல பாம்புகள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் பொழுது, பல மனிதர் கள் அவற்றுக்கு உதவி இருக்கிறார்கள். அதனால் அவை அவர்களுடைய வம்சத்தையே தீண்டமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருப்பதாக அறிந்தேன்” “எங்களூரில் நாக பாம்பை நல்ல பாம்பு என்று தான் கூறுவார்கள். அவையும் உடனே தீண்டுவதில்லை. முதலில் எச்சரிக்கை கொடுக்குமாம். தனக்கு தீங்கு செய்யாமல் விலகி விட்டால் அவையும் தீங்கு செய்வதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதேவேளை ஒரு நாகத்தைக் கொன்றால் அதனைக் கொன்றவர்களை அத னுடைய கண்ணில் பார்த்து, அதன் இணை அந்த நபரைக் கொல்லும் என்று சொல்கிறார்கள். இது எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் வர்மன்.

“பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்று ஒரு பழமொழி எங்களூரில் இருக்கிறது. பாம்பைக் கண்டதும் எவருக்கும் பயம் வருவது இயல்பாகும். அதனால் அவற்றை அடித்துக் கொன்று விடுவார்கள். இது பயத்தால் ஏற்படுவது. (தொடரும்...)

மற்றும்படி அதை கொல்ல எவரும் விரும்புவதில்லை. மனிதர்கள் வாழும் பிரதேசத்திற்குள் வராமல் இருந்தால் எவரும் அதற்கு தீங்கு செய்யப் போவதில்லை” என்றான் வர்மன்.

“நீங்கள் இப்போது செல்லப் போகும் நாகலோகத்தில் பாம்புகள் எப்படி மனிதர்களுடன் பழகுகின்றன என்பதைப் பார்க்கத் தானே போகிaர்கள். ஆனால் நாங்கள் புது மனிதர்களாக இருப்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மூலிகைகளைக் கொண்டு வந்தேன்” என்றாள் புருஷிமா.

இவ்வாறு கதைத்துக் கொண்டே அப்பிரதேசத்தை சுற்றிப் பார்த்தார்கள். பின்னர் அங்கிருந்து மீண்டும் பயணமானார்கள். இந்தப் பிரதேசமே இப்படிப் பாம்புகள் நிறைந்ததாக இருந்தால் அங்கு எப்படி இருக்குமோ? அவற்றைப் பார்க்கும் போது பயம் வருவது பழக்கத்துக்கு வந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டே பறந்து கொண்டிருந்தான் வர்மன்.

மாலை மயங்கி வரும் வேளை புருஷிமா கூறினாள் “நாம் இப்போது நாகலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். செல்லும் போது இரவாகிவிடும். அந்த நேரத்தில் சென்றால் அங்கு எதுவும் செய்ய முடியாது. ஆகவே இரவை நாம் இடையில் நின்று கழித்து விட்டு காலையில் அங்கு செல்வோம்” என்றாள்.

வர்மனுக்கும் அது சரியாகவே தோன்றியது. அவள் துணையாகத் தனக்குக் கிடைத்தது எவ்வளவு நல்லது என்று எண்ணினான். இல்லையேல் இப்படி ஒரு ஆலோசனை சொல்ல எனக்கு யார் இருக்கப் போகிறார்கள்?

அதன்படி இரவை இடையில் ஒரு இடத்தில் கழித்தார்கள். புருஷிமா தான் கொண்டு வந்திருந்த ஏதோ சிற்றுண்டியைக் கொடுத்தாள். இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார்கள்.

அடுத்த நாள் வழமைபோல் பட்சிகள் பாடி துயில் எழுப்பியது. தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பயணத்துக்கு தயாரானார்கள்.

“அங்கே அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். நாம் திருமணமானவர்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் புருஷிமா.

தொடரும்......

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.