புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
உலக குடியிருப்புதினம்

உலக குடியிருப்புதினம்

ஜனாதிபதி பிரதம அதிதி

ட மொரட்டுவை சொய்சாபுரவில் பிரதான வைபவம்

1986இல் உலக குடியிருப்பு தினம் ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு இவ்வருடத்துடன் 27 வருட விழாவினை உலகெங்கும் கொண்டாடுகின்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதமுதல் வாரத்தில் வருகின்றமுதற் திங்கட்கிழைமையை உலககுடியிருப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி உலகம் முழுவதிலும் இத்தினம் கொண்டாடப் படுகின்றது.

இலங்கையில் அக்டோபர் 1ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை குடியிருப்பு வாரமாக பிரகடனப்படுத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு மொரட்டுவை நகரில் உள்ள சொய்சாபுர வீடமைப்புத் தொகுதியில் உள்ள மைதானத்தில் கொண் டாடிவருகின்றது. குடியிருப்புதினமான 7ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சொய்சாபுர தொடர் மாடிவீடுகள் நவீனமயப்படுத்தப்பட்டதிட்டம் 20 வீடுகள் கொண்ட தொடர் மாடிவீடமைப்புத் திட்டம் மேலும் 20 வீடுகள் கொண்ட தொடர் மாடிவீடமைப்புத் திட்டம் நிர்மா ணக்கைத்தொழில் பயிற்சிநிலையம் என்பன திறந்து வைக்கப்பட வுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் வீட்டுரிமைப்பத்திரம் அற்ற 4000 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப்பத்திரங்கள் தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக வழங்கி வைக்கப்பட உள்ளது அத்துடன் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களது சிறுவர்களுக்காக நகரக்குடியிருப் புப் பற்றிய ஓவிய மற்றும் சித்திரக் கண்காட்சிகள், வீடமைப்பு மொறட்டுவை பிரதேச அரசநிறுவனங்கள் நட மாடும் சேவைகள் இடம் பெறுகின்றன. அத்துடன் மும்மொழிகளிலும் நாட ளாவியரீதியில் பாடசாலை மாணவர்களுக் கிடையில் நடாத்திய கட்டுரை மற்றும் மேடை நாடகங்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கிண் ணங்களும் பணப்பரிசில்களும் ஞாபகார்த்த சின்னங்களும் ஜனாதிபதியினால் வழங்கபடவுள்ளன.

ஐக்கியநாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஐக்கியநாடுகள் மனிதகுடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இது விடயத்தில் முக்கிய கவனஞ் செலுத்தி விசேட தொனிப் பொருளொன்றை உருவாக்கி உலகத்தின் பிரதான நகரமொன்றை மத்திய நிலையமாகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் இத் தினத்தை கொண்டாடிவருகின்றது. 2013ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக “மாறிவரும் நகரத்தின் எளிமையான பயணத்தை” என ஹெபிடாட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதன் உலகில் எப்போது தோற்றம் பெற்றதோ அப்போதே உணவுப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. அவன் தட்ப வெப்பநிலைகளின் தாக்கத்தையும் வெட்கத்தையும் உணரத் தலைப்பட்டபோது உடைப் பிரச்சினை தோன்றியிற்று. ஆனால் அவன் ஜீவனோபயத்திற்கான தங்கி வாழவேண்டிய நிலைவரும் வரை அவனுக்கு வீட்டைப் பற்றியபிரச்சினை தோன்றவில்லை.

அதன் பின்னரே அவனுக்கு தான் குடியிருக்க ஒரு வீடுவேண்டும் என எண்ணதோன்றியது. இன்று இந்த வீடு ஒரு குடும்பத்தின் இலட்சனையாகவும் ஒரு மனிதன் உரிமை பாராட்டக் கூடிய அதி முக்கிய பொருளாகவும் மனிதவாழ்வின் நீடித்த அத்தாட்சியமாகவும் மாறிவிட்டது. சமுகத்தின் அமைதியின்மைக்கு வீடில்லாமை ஒரு காரணமாகும்.

மனிதவாழ்க்கைக்குப் பொருத்தமற்ற வீடுகளில் வாழுகின்றமக்களின் வீட்டுத் தேவை களையும் அதனோடுதொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகளையும் கருத் திற்கொண்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கான ஒரு சர்ந்தப்பத்தை வழங்குவதற்காகவே சகல நாடுகளிலும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறைகளுக்கு தனியான அமைச்சுகளும் இரு ந்துவருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்து வருகின்ற அநேகமானநாடு களில் பெரும்பாலானமக் கள் வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற குடி யிருப்புகளிலேயே வாழ் ந்து வருகின்றனர்.

நகர்ப்புறங்களில் இப் பிரச்சினையானது மிகவும் உக்கிரமடைந்துள்ளது. இன்று உலகமக்கள் தொகையில் நான்கிலொரு பங்கினரே நிலையான சொந்தமான வீடுகளில் வாழ்கின்றனர். ஏனையோர் வாடகை வீடுகளிலும் குடிசைகளிலும், சேரிவீடுகளிலும் பஸ் நிலையங்களிலும் லயன் அறைகளிலும் தற்காலிக கூடாரங்களிலும் வாழ்ந்துவருகின்றனர். இந்த உண்மையை அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்டபுள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

மூன்றாம் மண்டலநாடுகளிலேயே இத்தகைய வீட்டுப் பிரச்சினைகள் பெருமளவில் தலைதூக்கியுள்ளன. இந்தப் பிரச்சினைவெறும் பிரச்சினையாகமட்டுமன்றி சமூக அமைதியின்மைக்கும் பொருளாதாரவீழ்ச்சிக்கும் அரசியற் சீரழிவிற்கும் காரணமாய் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேல்மாகாணநகரங்களில் வாழும் மக்கள் சமூகஅபிவிருத்திக்குத் தேவையானவசதிகளைப் பெறப்பல இன்னல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. இம்மக்கள் தமக்குத் தேவையான உடை, உணவு, வீட்டுவசதிகளையும் மற்றும் பொதுவசதிகளான நீர், வழங்கல், வடிகாலமைப்புபோன்றவற்றினைப் பெறவும் அதிக கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

கொழும்பில் பாதுகாப்பு காரண்ஙகளுக்காக சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுவதன் மூலம் அரசு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கொழும்புநகரில் அரசுக்குச் சொந்தமான காணிகள் அறவே இல்லாமையினாலும் தொடர் மாடி வீடுகளை கட்டுவதற்கு தேவையான நிதி இன்மையினாலும் நகர் புறவீடமைப்புத் திட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் 66 ஆயிரம் மக்களுக்கு அவசர அவசரமாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. இருந்தும் ஆசியாவின் ஆச்சரியமிக்க அழகான நகராக கொழும்பை மாற்றி அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 66 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கமுடியாமல் உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட தொடர் ‘மாடி வீடுகளை அகற்றவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களில் பாரிய சீர்கேடுகள் காணப்படுகின்றன. முறையான பராமரிப்பு இன்மை, சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிப்பு, சீரான நீர் விநியோகம் இன்மை, கழிவு நீர் வழிந்தோடக்கூடிய கான் திட்டம் இல்லாமை, சூழல் மற்றும் சுகாதார வசதிகள் அற்ற பிரதேசமான இருத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டு.

இலங்கையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 12 கரையோர மாவட்டங்களில் 117,000 வீடுகள் முற்றாக சேதமுற்றன. வடக்கிழக்கில் நடைபெற்றயுத்தத்தினால் 6 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். 2 இலட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன அவற்றில் இதுவரை 50 ஆயிரம் வீடுகளே மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மிகுதியான 1 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகள் வடகிழக்கில் நிர்மாணிக்க வேண்டியுள்ளது. இந்திய அரசின் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் இதுவரை 1500 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மிகவும் மந்தநிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.