புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

பென்சிலின் உருவான கதை

பென்சிலின் உருவான கதை

ஃப்ளெமிங் 1881ல் ஸ்கொட்லாந்தில் பிறந்தார். 1ம் உலக போரின்போது படைவீரர் பலர் காயம டைந்து தொற்றுநோய் கிருமி தாக்கப்பட்டு இறந்தனர். அதனைக் கேள்விப்பட்டு, பகற்aரி யாவைக் கொல்வதற்கு என ஒருமருந்தை கண்டு பிடிப்பேன். என்று சபதம் கொண்டார் ஃப்ளெபிங்.

1928ல் லண்டனில் உள்ள செயின்ட் மேரி” மருத்துவமனையில் விடுமுறையில் கிருமி பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு விடுமுறை நாளாகையால் பொருட்களை அப்படியே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதில் ஒரு தட்டுமட்டும் மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால், மெல்லிய பூஞ்சணம் அந்தகட்டில் படிந்திருந்தது. சில நாட்கள் கழிந்து அந்த கட்டை ஆராய்ந்து பார்த்த போது பூஞ்சணம் பிடித்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன. ஏனைய பகுதியில் பெருகி இருந்தன.

உடனே ப்ளெமிங் அப்பூஞ்சணத்தை பயன்படுத்தி ஒருமருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின் பெயர் பென்சிலினா நோடேடம். அதனால் அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.

கனகலிங்கம் துஷாரகன்

தரம் -11A,

க/மு விபுலானந்த மத்திய கல்லூரி

காரைதீவு (கி.மா)

சின்ன மகள்!

சின்ன மகளின் சிரிப்பில்
சிந்தை குளி ராகுதே!
என்னைப் பிரியும் நேரம்
ஏன்தான் நெஞ்சு துயராகுதே!

பள்ளி செல்லும் காலை
பாங்காய் எழுந்திடு வாளே!
துள்ளி ஓடி விளையாட
தம்பியோடு சேர்ந் திடுவாளே!

வானின் நில வாய் என்னை
வட்ட மிடு வாளே
தேனின் சுவை யாய்
தங்க மகள் கதைத்திடுவாளே!

ஆடிப் பாடி நாளும்
அன்பாய் இருந்திடுவாளே!
தேடித் தேடி என்னை காணாமல்
தெரு விற்கும் வந்திடு வாளே!

கவி கஸ்புள்ளா,

கிண்ணியா.

விஞ்ஞான விளக்கங்கள்

* ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பசு இனங்கள் நுவரெலியா போன்ற பிரதேசங்களில் வளர்க்கப்படும் போது அதிக பாலைத் தருகின்றன.

ஐரோப்பாவிலுள்ள குளிர்மையான பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பசுக்கள் நுவரெலியாவிலும் ஒரே காலநிலையைச் சந்திக்கின்றன. மேலும் அவற்றுக்கு தேவையான போஷனைகளை வழங்கும் புல் இனங்களே இங்கும் உள்ளன. இதனாலேயே, அவை அதிகளவு பாலை தருகின்றன.

*குளிர்மையான பிரதேசங்களில் காணப்படும் காடுகளில் நிலத்தில் உக்காத தாவர பகுதிகள் படையாக காணப்படும்.

நுண்ணங்கிகளின் செயற்பாடுகள் காரணமாக, தாவர பீடைகள் உக்குகின்றன. நுண்ணங்கிகளின் செயற்பாட்டிற்கு சிறப்பு வெப்ப நிலை காணப்படாததால் அவற்றின் உக்கும் தன்மை குறைவடைகிறது.

* இருவாட்டிமண் தாவரங்கள் வளர்வதற்கு உகந்ததாகும்.

இருவாட்டி மண் சமஅளவில் களி, மணல், உக்கல் என்பவற்றைக் கொண்டது. மேலும், பயிர்களுக்குத் தேவையான அளவில் நீரடக்கம், வளியடக்கம், தாவர போஷனைகள் அதிகம் கொண்டுள்ளதால் தாவர வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

சிறப்புப் பெயர்கள்

* தெய்வப் புலவர் - திருவள்ளுவர்

* தமிழ் மூதாட்டி - ஔவையார்

* தமிழ்த் தாத்தா - உ. வே. சாமிநாதய்யர்

* முத்தமிழ் வித்தகர் - சுவாமி விபுலானந்தர்

* தமிழ் முனிவர் - வீரமாமுனிவர்

* தமிழ் பேனாட்ஷா - மு. வரதராஜன்

* கவிக் குயில் - எம். எஸ். சுப்புலட்சுமி

* இசைக் குயில் - பி. சுசிலா

* வானொலிக் குயில் - ராஜேஸ்வரி சண்முகம்

* புலவர் மணி -அ.மு. ஷரிபுத்தீன் புலவர்

* தமிழ் உலகத் தந்தை -கலையரசு சொர்ணலிங்கம்

* முது தமிழ்ப் புலவர் - மு. நல்லத்தம்பி

* பண்டித மணி - சி. கணபதிப்பிள்ளை

* புலவர் மணி - பெரிய தம்பிப்பிள்ளை

* பாவேந்தர் - பாரதிதாசன்

எம். எம். எப். இல்மா தரம்-09,

கா/ உஸ்வதுன் ஹஸனா ம.வி,

கட்டுகொடை, காலி.

பொன் மொழிகள்

ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான்

தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்கு சமம்.

குற்றம் காண்பதைவிட, குணத்தைக் காண்பதுதான் உயர்ந்த குணம்.

பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவன் பேறு பெற்றவன்.

தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத்தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

விவேகானந்தர்


 

 

கே. காயத்ரி பிரியா,
தரம்-05கி,
கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி,
பம்பலப்பிட்டி.

எம். ஆர். எப். அஸ்கா,
தரம்-04தி,
அல். முபாரக் பாலர் வித்தியாலயம்,
மல்வானை.

ஆர். உவைஸ்,
தரம்-09கி, கமு/ அல். அஷ்ரப் மகா வித்தியாலயம், மாவடிப்பள்ளி.

எம். எப். மொஹமட்,
தரம்-04, கா/சேர் ராஸிக் மு.ம.வி,
பனாப்பிட்டிய. கரன்தெனிய.

எம். எப். எம். அப்லஸ்,
தரம்-10கி,
ஹ/ ஸாஹிரா தேசிய பாடசாலை,
ஹம்பாந்தோட்டை.

ஜே. திலுக்ஷி,
தரம்-08,
மது/ கலைமகள் த.வி, மத்துகம.

மோகனசுந்தரம் துலக்ஷிகன்,
தரம்-08,
மட்/பட்/ துறைநீலாவனை
விபுலானந்த வித்தியாலயம்,
பட்டிருப்பு.

எஸ். எம். சாஜித்,
தரம்-09கி,
கழு/ அல். அஷ்ரப் மகா வித்தியாலயம்,
மாவடிப்பள்ளி.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.