புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
மாடிப்படிகள் இருளாக இருப்பது அதிர்ஷ்டமா?

மாடிப்படிகள் இருளாக இருப்பது அதிர்ஷ்டமா?

வீட்டில் மீன் வளர்ப் பது சம்பந்தமாகக் கடந்த வாரம் எழுதியிருந்ததைப் படித்து விட்டு மாவனல்லையில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கதைத்தார்.

“சேர், கடந்த வார தினகரன் வாரமஞ்சரியில் நீங்கள் எழுதிய வாஸ்து உங்கள் தோஸ்து பகுதியில் மீன் வளர்ப்பதால் ஏற்படும் நன்மையைப்பற்றி எழுதி இருந்தீர்கள். அதில் வீட்டில் மீன் வளர்ப்பதால் நமக்கு ஏற்பட இருக்கும் அந்த ஆபத்துக்களை அந்த மீன்கள் காப்பாற்றும் என்றும் எழுதியிருந்தீர்கள். இது உண்மைதான் என்பதை எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றின் மூலம் நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இது. எங்கள் வீட்டிலும் ஒரு மீன் டேங்க் இருக்கிறது. ஒருநாள் காலையில் பார்த்த போது அதில் உள்ள மீன் களில் இரண்டு மீன்கள் இறந்து போயிருந்தன. இதற்கு என்ன காரணம் என்று நாங் கள் யோசித்துக் கொண்டிரு ந்த போது, எங்களுக்கு அதிர்ச்சியான ஒரு தகவல் கிடைத்தது. அது என்ன தகவல் தெரியுமா?

முதல்நாள் இரவு காரில் கண்டிக்குப் போன எங்களது உறவினர்கள் இருவர் விபத் தில் சிக்கி தெய்வாதீனமாக உயிர் தப்பிவிட்டார்கள் என்ற தகவல்தான். இந்தவாரம் உங்களது வாஸ்து சம்பந்த மான கட்டுரையைப் படித்த பிறகுதான் அவர்கள் உயிர் தப்பிய காரணம் புரிய வந் தது. இதைச் சொல்வதற்காகத் தான் கோல் பண்ணினேன் என்றார்.

எங்களுடைய வாசகர்க ளுக்கும் அவருடைய இந்த கருத்து பயன்படுமே என்பதனால்தான் இந்த உரையாடலை இங்கே எழுதினேன்.

மாடிப்படிகள் இருளாக இருப்பது அதிர்ஷ்டமா?

சமீபத்தில் நண்பர் ஒருவ ரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கே வந்திருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் எனது நண்பர்.

நான் யார் என்று தெரிந்து கொண்டதும் அந்தப் பெண் மணி என்னிடம் இப்படிச் சொன்னார்.

“நாங்கள் வீட்டின் கீழ்ப் பகுதியில் இருந்த போது எங்களிடம் பணப்புழக்கம் நிறையவே இருந்தது. சமீபத்தில் மாடியைக் கட்டி விட்டு அதில் நாம் குடியேறி னோம். ஆனால் இப்போது எங்களுக்கு பணத்தட்டுப் பாடு வந்துவிட்டது. இதனால் மாடி அறைகளில் ஏதாவது வாஸ்து§¡ஷம் இருக்குமோ என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது” என்றார்.

உண்மையில் சொல்லப் போனால் மாடிகளில் வாஸ்து தோஷம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மாடிப் படிகளில்தான் இந்த வாஸ்து தோஷம் அதிகமாகவே இருக்கும்.

அதற்குக் காரணம்.

இந்த மாடிப்படிகள் பகல் நேரங்களிலும் இருளாக இருப்பதுதான்.

பொதுவாக ஒரு கருத்தைச் சொல்வதாக இருந்தால், மாடிகளுக்கு அதிர்ஷ்டம் வருவது குறைவாகவே இருக்கும்.

மாடிக்குச் செல்லும் படிப்பட்டுகளைக் கட்டுகிறவர்கள் ஒரு விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது,

வீட்டிற்குள் இருக்கும் நான்கு சுவர்களில் ஏதாவது ஒன்றின் அருகில்தான் படியைக்கட்ட வேண்டும்.

காரணம், அப்போதுதான் அந்த மாடிப்படிக்கு வெளிச்சம் வரும் விதத்தில் ஜன்னல் ஒன்றை வைத்துக் கொள்ளலாம்.

நடுஹாலின் பக்கம் தனியாக மாடிப்படிகளைக் கட்டினால் மாடிப்படிக்கு வெளிச்சம் வரும் விதத்தில் ஜன்னலை அமைப்பதில் சிரமம் ஏற்படும்.

உங்கள் மாடிப்படிக்கு அருகில் ஜன்னல் இல்லாமல் அந்தப்பகுதி பகல் நேரங்களிலும் இருட்டாக இருந்தால்,

அந்த மாடியில் தங்கி இருப்பவர்களின் வாழ்விலும் வெளிச்சம் இருக்காது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சரி,

அப்படியானால் பகல் நேரத்திலும் மாடி இருக்கும் பகுதி இருளில் மூழ்கியிருந் தால் என்ன செய்ய வேண்டும்.

அந்தப் பகுதியில் ஒளி வரும் படி பல்ப் ஒன்றை எரியவிட வேண்டும்.

அந்த மாடிப்படிகளின் ஒளி வெள்ளம் பரவினால் மாடியில் குடியிருப்பவர்களின் வாழ்விலும் ஒளி பிறக்கும்.

அதன் பிறகு,

துரதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.