புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
ஏடாகூடமான கேள்விகள் ?

ஏடாகூடமான கேள்விகள் ?
 

ஏடாகூடம் : மொழி

கேள்வி : உங்கள் கவிதையோடு விளையாடிப் பார்க்க எனக்கு ஆசை. எடுத்து விடுங்களேன் இரண்டு வரிகள். துடிக்க மீசை.

பதில்: பார்வையில் தந்தால் சங்கமம் இது பாமழை நாளும் சிந்தும்.

(இதைக் கேட்டு துடிக்கவில்லை மீசை வீணாகிப் போய்விட்டது என் ஆசை)

கேள்வி : நீங்கள் கவிதை எழுதும் போது பக்கத்தில் ஒரு காரிகையும் இருப்பதாகச் சொல்லுகிறார்களே! உண்மையா?

பதில்: உண்மை – நான் கவிதை எழுத அமர்கின்ற மேசையின் மீது பல புத்தகங்களும் தாள்களும் இருக்கும் அப்படி உள்ள புத்தகத்தில் ஒன்றுதான் நீங்கள் கூறிப்பிட்ட காரிகை ‘யாப்பலங்கார காரிகை’

(‘காரிருள்’ தான் இருக்கும் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றுவிட்டிரே கவிஞரே)

கேள்வி : உப்பு சப்பில்லாத கவிதைகளைப் படிக்கும் போது அதை எழுதியவர்களின் முகத்தில் அப்பு அப்பென்று அப்ப வேண்டும் போல் உங்களுக்குத் தோன்றுகிறதா?

பதில்: இல்லை – இப்படி கேள்வி கேட்கின்ற உங்களை தான் நாலு அப்பத் தோன்றுகிறது.

(அடடா! இனம் இனத்தோடு சேர்கிறது போல் தெரிகிறதே.....!)

கேள்வி : ஏ ஆணே! இங்கே வராதே அடிக்கடி! ஏற்கனவே, கையில் குழந்தையுடன் இங்கே பலர்! இப்படி ஒரு பெண் உங்களிடம் சொன்னால் உங்கள் பதில் கவிதை எப்படி இருக்கும்?

பதில்: நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிaர்கள் என்ற சொல்வேன்

(ஓ... இப்படியும் பதில்??? கவிதை இருக்கிறதா????)

கேள்வி : ஏடாகூடமாக இரண்டு வரிகளில் ஒரு கவிதையை எடுத்து விடுங்களேன் பார்ப்போம்.

பதில்: ஆடையில் விழுந்த அழுக்கல்ல - காதல் அலசியவுடன் போவதற்கு ஓடையில் ஓடும் நீரல்ல - காதல் கோடையில் வற்றிப்போவதற்கு

(கூடையில் நிறைய இருக்கிறது போல் - கேட்டதும் எடுத்து விடுவதற்கு!)

கேள்வி : ஒரு கவிஞனுக்கும் கலைஞனுக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: ஒரு எழுத்து மட்டுமே கவிஞனுக்கு ‘வி’ வருகிறது கலைஞனுக்கு ‘லை’ வருகின்றது ஓர் எழுத்தின் இடமாற்றம் சொல்லின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது – இதுதான் தமிழின் தனித்துவம். கவிஞன் / கலைஞன்

(நான் வேறு பதிலை அல்லவா எதிர்பார்த்தேன்)

கேள்வி : 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடை எது?

பதில்: ‘சாக்கடை’

(4வது கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘கோட்டை’ விட்டு விட்டு இதற்கு மட்டும் பதில் சொன்னால் எப்படி?)

கேள்வி : உங்களை கவிஞனாக்கிய கல்லூரி எது?

பதில்: வாழ்க்கை - அது தந்த மேடு பள்ளமான வருத்தங்களும் வசந்தங்களும். அதில் மலர்ந்த அனுபவங்கள என் கவிதை.

(ம்.... இருக்கட்டும்... இருக்கட்டும்)

கேள்வி : உங்களுக்கு காதல் கவிதை பிடிக்குமா? கூதல் கவிதை பிடிக்குமா? அல்லது மோதல் கவிதை பிடிக்குமா?

பதில்: இவை எல்லாவற்றையும் விட மக்கள் எழுச்சி கவிதைகளே என்னை அதிகம் நேசிக்க வைக்கிறது. தேனாலும் பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது - பட்டுக்கோட்டை

(பட்டுக்கோட்டையாக விடமாட்டீர்கள் போலும்)

கேள்வி : காதலிக்கு கவிதை மூலம் ‘அல்வா’ கொடுத்த அனுபவம் உண்டா?

பதில்: கவிதை மூலம் ‘அல்வா’ கொடுப்பது எப்படி என்று உங்கள் அனுபவத்தை சொன்னால் கேட்டுக்கொள்கிறேன் - நீங்கள் தான் ‘அல்வா’ மன்னன் ஆயிட்டே.

(4வது கேள்வியில் உள்ள கவிதையை படித்து விட்டு இந்த கவிதையை படியுங்கள்.

ஏ... பெண்ணே
அடிக்கடி சிரிக்காதே
தாடியுடன்
ஏற்கனவே
இங்கே பலர்!
(இந்தக் கவிஞரே கவிதையில் அல்வா கொடுப்பது என்பது)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.