புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

தான் ஆடாவிட்டாலும் தன் தசை

தான் ஆடாவிட்டாலும் தன் தசை

ஆடும் என்பதை நிரூபித்த சம்பந்தன்!

“தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பது போல தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் நாட்டுப்பற்றைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. தனது தாய் நாட்டிற்கு ஒரு அவமானம் நேரிடப் போகிறது என்பதை அறிந் ததும் அதற்காக ஒருகணம் தன்னையே மறந்து தனது தாய் மண் மீதுள்ள பற்றை சம் பந்தன் அவர்கள் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கள் தொடர்பான மாநாட்டில் இலங்கை மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உலக அரங்கில் எமது நாட்டிற்கு அபகீர்த் தியை ஏற்படுத்தி எம்மைத் தனிமைப்படுத்தத் திட்டமிட்டுவருகின்றன.

பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உந்துசக்தியாக இருந்துவிட்டு இன்று அதில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைக் கண்டுபிடித்து போர்க்குற்றவாளியாகச் சித்திரிக்க முனைந்துவரும் நாடுகளின் சுயநலப் போக்கினை, இன்று சம்பந்தன் ஐயா போன்ற எதி ராகக் குரல்கொடுத்து வந்த உள்நாட்டவர்கள் பலரும் உணர்ந்துள்ளனர்.

புலிகளை அழிக்க மேலைத்தேய நவீனரக ஆயுதங்களை வழங்கியவர்களே இன்று புலிகளை அழித்தவிதம் தவறு என்று வாதிட்டுவருவது வேடிக்கையான விடயமே எனி னும், இவர்களை இவ்வளவு தூரம் இயங்கவைத்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுக ளில் வாழுகின்ற தமிழ்ச் சமூகத்தினுள் ஊடுருவிக் காணப்படும் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளையும் நாம் கவனத்திற் கொள்ளவே வேண்டும்.

சர்வதேசத்தில் பலம் பெற்று விளங்கும் சில ஊடகங்களைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு உலகளாவிய ரீதியில் இவர்கள் செய்துவந்த, செய்துவரும் தீவிர எதி ர்ப்புப் பிரசாரமே இன்று இலங்கைக்கு இந்நிலை தோன்றுவதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

முப்பது வருடகால பலம்கொண்ட புலிகள் அமைப்பை இந்தியப் படைகளே அழிக்க முடியாது தோல்வி கண்ட நிலையில் திரும்பிச் செய்கையில் அதனை முற்றாக அழித்து விட்ட சாதனை படைத்த இன்றைய அரசாங்கம், போரின் அழிவுகளுக்கும் பாதிக்கப்ப ட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் புனர்வாழ்வும் நிவாரணமும் வழங்கி அபிவிருத்தியி லும் மீள்கட்டுமானத்திலும் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில் இந்த இடைவெளிக்குள் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புகள் தமது எதிர்ப்புப் பிரசாரத் தைக் கச்சிதமாகச் செய்துவிட்டன.

அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் என்பவற்றுடன் அரசாங்கம் தமிழ் மக்க ளுக்கு அரசியல் ரீதியானதொரு தீர்வினையும் முன்வைத்திருந்தால் இன்று சற்றேனும் மனச்சஞ்சலம் ஏற்பட்டிருக்க வேண்டிய நிலை எழுந்திருக்காது. ஆனால் அரசாங்கத்தை தீர்வினை முன்வைக்க விடாது காலத்தை வெறுமனே கடத்தி வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தான் செய்த சூழ்ச்சிதான் அரசாங்கம் இன்று உலக அரங்கில் தர்மசங்கடப்படும் நிலை க்கு தள்ளப்பட்டுள்ளமைக்குக் காரணம் என்பது இரா. சம்பந்தன் ஐயாவுக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர் இறுதி யுத்தத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அதனை அவ்வாறு செய்திருந்தாலும் இன்று ஜெனீவா சென்று, அங்கு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவு வழங்காது தவிர்த்துக் கொண் டமையானது உள்நாட்டில் இந்த அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழருக்கு ஒரு தீர் வைப் பெற்றுக் கொள்வதை அவர் விரும்புவதையே உணர்த்தியுள்ளது.

இரா. சம்பந்தன் ஐயாவின் தீர்க்கதரிசனமான தீர்மானத்தை சமாதானத்தை விரும்பும் சகலரும் பாராட்டவே செய்வர். அவர் தனது பழுத்த அரசியல் முதுமைக்கு இலக்கண மாக, எடுத்துக்காட்டாக நடந்துள்ளார். நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் சில இன்றே தலைவராக வேண்டும் என்ற நினைப்பில் சம்பந்தன் ஐயாவின் தூரநோக் கிய முடிவை எதிர்த்து அறிக்கை விட்டுவருகின்றன. இவர்கள் அரசியலில் வெறும் கத் துக்குட்டிகள்.

தமிழ் மக்களிடம் தம்மை தக்க வைத்து பிரபல்யமாகி தலைவராகும் எண்ணத்துடன் எவ்விதமான அரசியல் விவேகமற்ற சிலர் மக்களைத் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். சம்பந்தன் ஜயாவின் தீர்மானத்தை தமிழ் மக்கள் அனைவருமே ஏற்றுக்கொண் டுள்ளனர். சிலர் இவர் சலுகைகளுக்குச்சோரம் போனதாகவும் ஏன் அச்சுறுத்தப்பட்டுள்ள தாகவும் கூட கற்பனை அறிக்கைகளை விட்டுவருகின்றனர்.

தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் அவர் எமது நலனுக்காகவே எதனையும் செய் வார் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். ஒருவேளை சம்பந்தன் தனது தலைமையில் சுரேஷ், அரியநேத்திரன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு ஜெனீவா சென்று எமது நாட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்து அது இங்கு தமிழினத்திற்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்தினால் அதற்கும் இந்தக் காளான்கள் சம்பந்தனைப் பார்த்துத்தான் வசை பாடியிருக்கும்.

எனவே நிலாவைப் பார்த்துக் குரைப்பவர்களை அதுவாக எண்ணி ஒருபுறம் தள்ளி விட்டு எமது அடுத்த கட்ட நகர்வு பற்றி யோசிக்க வேண்டும். அரசுடன் கீரியும் பாம்பு மாக இருந்த சம்பந்தன் ஐயாவின் தாய் நாட்டுப்பற்றை ஏனைய எதிர்க்கட்சிகளும் பின் பற்ற வேண்டும். எமக்குள் எதிரிகளாக நடந்து கொண்டாலும் மூன்றாம் உலகு முன்பாக நாம் இலங்கையராக, சகோதரர்களாக மாற வேண்டும்.

சம்பந்தன் ஐயாவின் முன்மாதிரி உண்மையில் நாட்டுப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இனியும் எமது நாட்டை விமர்சிக்கும் எம்மவர்கள் சம்பந்தனை ஒருகணம் மனதில் நிறுத்தி அவர் வழி நடக்க வேண்டும்.

[email protected]

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.