புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 
விசுவமடுவில் சந்தித்த மற்றோர் ஆச்சரியம்

விசுவமடுவில் சந்தித்த மற்றோர் ஆச்சரியம்

வடக்கில் வீசிய வெப்பமான காற்று என் வாழ்க்கையையும் சூடாக்கியது. நான் அனுரங்கவின் வாகனத்தில் ஏறி வேறு ஒரு திசையில் பறந்து போகின்றேன். விசுவமடுவின் சவுந்தரம்மாவின் கண்ணீர் கதையின் பின் நாம் இப்போது சுன்னாகத்தினூடாக பயணம் செய்கின்றோம்.

வெளியரங்கம்

என் மனம் இறந்த காலத்துக்கு ஓடிச் சென்றது. அன்றைக்கு ஆறு நான்கு என்ற எண்கள் கூட ஓரளவுக்கு விளங்கும் சிறு வயதிலே நானும் என் தந்தையும் யாழ்தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற பயணம் எனக்கு ஞாபகம் வந்தது. அன்று இந்த சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து நான் புகையிரதத்தின் யன்னலினூடாக வெளியில் எட்டிப்பார்த்த போது இங்கு கூட்டமாக இருந்த சுளகு, பெட்டிகளை கைகளிலேந்திக் கொண்டு இருந்த தமிழ் மக்கள் இப்போது எங்கே? இன்று எவரையும் இங்கு காண முடியாது.

பயங்கரவாதத்தினால் உடைந்து சின்னா பின்னமாகிப் போயிருக்கும் புகையிரத நிலையம் எனக்குத் தெரிகின்றது. பிரதான பாதையின் குறுக்கே விழுந்து அமிழ்ந்திருக்கும் தண்டவாளங்கள் மாத்திரம் கடந்த காலத்தில் புகையிரதம் ஓடியதற்கு சான்று பகர்கின்றது.

நான் சுன்னாகம் புகையிரத நிலையத்துக்கருகில் வாகனத்தை நிறுத்துமாறு அனுரங்கவிடம் கூறினேன். எமது புகைப்படப்பிடிப்பாளரும் சுறு சுறுப்பாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தார். இந்த புகையிரத நிலையத்தில் சில இடங்களில் கூரைகளைக் கூட கழற்றியிருந்தனர். யுத்தத்தினாலே அனாதைகளாக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் இந்த புகையிரத நிலையத்தை சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஆடுகளும் கோழிகளும் புகையிரத மேடையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பெரிய சுகபோகமிக்க கோழிப் பண்ணையொன்று கிடைத்திருக்கின்றது. சரியாக புகையிரத தண்டவாளங்கள் இரண்டிலும் இரு பக்கத்திலும் காணப்படும் நிலப்பகுதியில் இப்போது இருப்பது பெரிய இரண்டு மரங்களாகும்.

பிரபாவின் கட்டிலுக்கருகிலேயே காணப்படுவது இன்சுலின் மற்றும் மருந்துகள் இருந்த பாத்திர மாகும். பஞ்சினால் நிரப்பப்பட்ட புலியும் கட்டிலின் அருகில் இருக்கின்றது.

அதற்கிடையில் அவ்வீட்டில் வசிப்போரின் உடைகளை வெய்யிலில் காய வைத்திருப்பதையும் காண முடிந்தது.

இந்த பெரிய இரு மரங்களுக்கும் யுத்தத்தின் வயதாகத்தானே இருக்கும்? சடுதியாக அனுரங்க என்னிடம் கேட்டார். நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையில் அது பற்றி எனக்கு ஞாபகமே வரவில்லையே? என்று நான் நினைத்தேன். இந்தளவு பெரிய கிளைகளைப் பரப்பியுள்ள மரங்கள் பயங்கரவாதிகள் ரயில் தண்டவாளங்களை கடத்திச் சென்றதன் பின்னரே வளர்ந்திருக்க வேண்டும். இந்த மரங்கள் அதற்குச் சில காலங்களின் பின்பே வளர்ந்திருக்க வேண்டும்.

ஏறக்குறைய முப்பது வருடங்களாக பயங்கரவாதிகள் கொண்டு நடத்திய போராட்டம் பற்றி இந்த மரங்களுக்குக் கூட தெரியும். அன்றைக்கு பயங்கரவாதத்தினரின் தரிப்பிடமாக இருந்த சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து வழிந்தோடிய வெடி மருந்துகளின் மணம், மோட்டார் ஒலியினால் இந்த மரங்கள் பயத்தினால் சுருண்டு இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அந்த மரங்களுக்குக் கேட்பதெல்லாம் புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சின்னஞ் சிறுசுகளின் பால் மணம் மாறாத குரல்களும் அவர்களின் சிறு பிள்ளைப் பேச்சுக்களும் தான்.

இந்த ரயில் தண்டவாளங்களைக் கழற்றி அவர்கள் என்ன செய்தார்கள்? நான் அங்கிருந்த ஒரு வறுமையான ஒரு அப்பாவி மனிதனிடம் கேட்டேன். அவர் சுற்றுமுற்றும் பார்த்து என்னிடம் இரகசியமாக ஒரு விடயத்தைக் கூறினார்.

சிறிய ஓய்வெடுக்கும் விடுதியும் பிரபாவின் மாளிகையின் சுவரொன்றும்

ஐயா, பங்கர் உருவாக்க எடுத்தார்கள் என்று சொன்னாலும் நிலத்தின் கீழமைந்த மாளிகையின் மேலே போடத்தான் கொண்டு போனார்கள். ஆயிரக்கணக்கான விமானத் தாக்குதல்கள் தாக்கினாலும் அந்த நிலத்தின் கீழமைந்த மாளிகையின் மேல் வெடிக்க வைக்க ஒரு பலசாலிக்கும் முடியவில்லை.

அவர் கூறியவற்றில் என் குதூகலம் மேலும் அதிகரித்தது.

நான் அந்த மாளிகையை தேடிச் செல்ல வேண்டும். அது எல்.ரீ.ரீ.ஈ. சிறைக்கூடங்களுக்கு அண்மையில் இருந்ததாக ஓர் இராணுவ அதிகாரி கூறியது ஞாபகத்துக்கு வந்தது. அனுரங்க ஒரு கடற்படை அதிகாரி மாளிகையை கவனமாகப் பார்ப்பது போல மீண்டும் வரை படத்தைப் பார்த்தார்.

நாம் அம்மாளிகையைத் தேடி மீண்டும் ஓடிக்கொண்டிருந்தோம். விசுவமாடுவிலுள்ள ஒரு கிராமத்தில் நிழலுக்கு உபயோகிக்கும் உயர்ந்த பெரிய மரங்களிருக்கும் ஓரிடத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருந்தது. நாம் அங்கு போகும் போது கூட அங்கு அதற்கு முன்னால் விசாலமான இரு கிடங்குகள் இருந்தன.

இந்த ஒரு கிடங்கில் பெரிய யானைகள் பத்து பன்னிரண்டு அமிழ்த்த முடியும். அந்தளவுக்கு அந்தக் கிடங்கு விசாலமானது.

உள்ளிருக்கும் படிகளின் வரிசை

பிரபாகரன் இருந்த அந்தப் பெரிய மாளிகை இப்போது அது ஒரு இராணுவ முகாமென்பதால் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதால் இக்கிடங்குகள் இப்போது ஓரளவுக்கு நிறைந்துள்ளன.

எமது விமானப்படை வீரர்கள் வானத்தில் பறந்து சென்று இலக்கு வைத்து இந்த மாளிகையை விமானத் தாக்குதல்களுக்கு உட்படுத்தினர். அது ஒரு நூலால் தப்பிவிட்டது என்பதை இந்தக் கிடங்குகளில் நிறைந்திருக்கும் துகள்கள் சான்று பகர்கின்றன. இன்னும் 5 மீற்றர்களுக்கப்பால் சென்றால் அத்தாக்குதல்கள் பிரபாகரனின் வீட்டின் உச்சியே தாக்கும்.

அந்த முகாமின் பிரதான இராணுவ மேஜர் அந்த மாளிகையை ஊடகவியலாளர்களுக்குக் காட்ட பெருமளவில் விரும்பவில்லை. என்றாலும் நாம் அந்த சவாலை வெற்றி கொண்டோம். எப்படியெனினும் பிரபாகரனின் இந்த மாளிகையின் எல்லாப் பக்கங்களும் மட்டுமன்றி அவரின் குளியலறை, மலசலகூடம் என்பவற்றையும் பார்த்தோம்.

அந்தப் பெரிய மாளிகையின் மேற்பாகத்தில் இருந்த கொங்கிaட் தரையானது 18 அடிகள் உயரத்துக்கு அமிழ்த்தியிருந்தது. வடக்கு, தெற்கை இணைத்த யாழ்தேவி புகையிரதப் பாதையில் காணப்பட்ட ரயில் தண்டவாளங்களினாலாகும். அது எந்தவொரு விமானத் தாக்குதலினாலும் அந்த உச்சியை சுக்கு நூராக்குவதை தடுக்கவே அவற்றைப் பாவித்திருந்தனர். இந்த மாளிகையின் ஓரத்தில் ஒரு சிறிய ஓய்வெடுக்கும் ஒரு விடுதியும் நிலத்தின் கீழ் ஒரு தட்டும் மேற்பாக்கில் மற்றுமொரு மாடியும் கொங்கிaட் உபயோகித்து அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இரு மாடிகளைக் கொண்ட மாளிகை குளிரூட்டப்பட்டிருந்தது. இப்போது குளிரூட்டல் உபகரணங்கள் கழற்றப்பட்டிருந்தன.

சுன்னாகம் புகையிரத நிலையத்தின் இன்றைய நிலைமை.

நான் அவரின்காரியாலய அறைக்குள் நுழைந்தேன். அந்த கதவு அமைக்கப்பட்டிருந்தது கடின தன்மை கொண்ட தேக்கு மரப் பலகையினாலாகும். குண்டுகளிள் மழை பொழிந்தாலும் கதவைத் துளைக்காத வண்ணம் அது உள்ளே ஒரு உரல் வடிவம். எங்கே செல்வது? திரும்ப வருவது எப்படி? என்று நினைத்துப் பார்க்க முடியாது. இன்னும் சில இடங்களில் மேற்புறமாக படிகளினாலமைந்த வேலியாகும்.

மற்றுமொரு பக்கத்தில் அவர் நித்திரை கொண்ட கட்டிலாகும். அதற்கண்மையில் பிரபாகரனுக்கு இருந்த பயங்கர நீரிழிவு நோய்க்குத் தேவையான இன்சுலினும், வேறு ஊசிகளும், மருந்து வகைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஒரு பாத்திரமாகும். அதற்கு அண்மையில் ஒரு மேசை போன்ற இருக்கையில் பஞ்சினால் நிரப்பப்பட்ட ஒரு புலியின் மாதிரி உருவப்படமாகும். பிரபா தனது ஆட்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் இந்தளவு பாதுகாவலை பலப்படுத்திக் கொண்டது ஏன்? தமது ஆட்களையே அவருக்கு நம்ப முடியாது என்பதனால் தான். அவர் உள்ளே இருக்கும் போது வெளியில் இருப்போருக்கு அவர் உள்ளே இருப்பது தெரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளே குளியலறையில் ஒரு சொட்டு தண்ணீர் துளி கூட வெளியில் வழிந்தோடாதவாறு உபாயங்களை கைக்கொண்டிருந்தார்.

அவர் குளிக்கும் போதும் மலசலகூடத்தைப் பாவிக்கும் போதும் நிலத்துக்குக் கீழ் தான் அத்தண்ணீர் வடிந்தோடியது. அதனால் பிரபா மாளிகையினுள் தான் இருக்கிறார் என்று யாராலும் உறுதியாக சொல்லக்கூடிய எந்த அறிகுறியும் இருக்கவில்லை. அவரின் படுக்கையறைக்கு உள் நுழையும் இடத்தில் வெடிகள் தாக்காத ஒரு கதவு இருந்தது. திடீரென குளிரூட்டல் சடுதியாக நின்று விட்டால் ஒட்சிசனை பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சிலின்டரையும் நாம் கண்டோம்.

இதைவிட பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த ஓர் இடத்தை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

தனக்கு மிகக் கிட்டியவர்கள் இறந்து போனால் அவர் தனது ஈழத்துக்காக உயிர் தியாகம் செய்த பெரும் வீரன் என்று மதித்து ஒரு பெட்டியில் வைத்து ஒரு நிமிடம் மரியாதை செலுத்திய வெளியரங்கமொன்று இந்த மாளிகையின் முற்றத்தில் காணப்பட்டது.

பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும் ஒருவருக்கு ஒரேயடியாக ஒரு குழுவாக வருவதை தவிர்க்க இரும்பு கற்றைகள் சிலவற்றை ஒரு வேலியாக உருவாக்கி ஒவ்வொருவராக வருவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.