புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
மீண்டுமொரு யுத்தம் நடைபெற

மீண்டுமொரு யுத்தம் நடைபெற

கூடாதென்பதே இந்நாட்டு மக்கள்

கற்றுக்கொண்ட பெரும் பாடம்
 

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் கடமைகள், ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரங்கள், அரச நிறுவனங்களிலிருந்து இது தொடர்பாக கிடைக்கும் ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் பற்றி அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஆர். ரணவக அவர்களோடு நடந்த கலந்துரையாடல்.

கேள்வி: அரச கரும மொழிகள் ஆணைக்குழு கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டு தொழிற்படுகின்றது என்றும் கிராமிய மக்களுக்கு இலகுவாக அதற்குள் பிரவேசிக்க முடியாதுள்ளது என்றும் நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அண்மையில் முன்வைத்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான உங்களது கருத்து என்ன?

பதில்: அந்த அறிக்கையையநோக்கும் போது அதற்குரிய சமூக சுற்றுவட்டம் மற்றும் பின்னணியையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பாக எமது பொறுப்பு என்னவெனில் பரந்த வகையில் அரச கரும மொழிக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலை உறுதி செய்வதாகும். அதன்படி பார்க்கும் போது அந்நாட்டின் மொழிக் கொள்கையோடு தொடர்புடைய பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படும் பல பிரதேசங்களை கொழும்புக்கு அப்பால் தெரிந்தெடுக்க முடியும். அவற்றுள் முக்கியமானது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசமாகும். அது தவிர நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி போன்ற பல மாவட்டங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதேபோல் நாடு முழுவதும் இந்த அனைத்து பிரதேசங்களிலும் பெருமளவு அரச நிறுவங்களின் தொகுதியொன்றும் தொழிற்படுகின்றது. பிரதேச செயலாளர் பிரிவுகள், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், பொலிஸ் உட்பட பாதுகாப்புப் பிரிவுகள் இவ்வாறு தொழிற்படும் நிறுவனங்களில் ஒரு சில மட்டுமே. இந்த நிறுவனத் தொகுதி முழுவதும் மொழிக் கொள்கை தொழிற்படும் விதத்தை ஆராய்வதும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க மத்தியஸ்தம் வகிப்பதும் எமது கடமையாகும். எனவே கொழும்புக்கு மட்டும் எல்லைப் படுத்தப்படாமல் நாடு முழுதும் இலேசாக தொழிற்படக் கூடிய நிறுவன கட்டமைப்பொன்றை பரிந்துரைப்பது ஒரு சிறந்த பரிந்துரையொன்றாகவே நாம் காண்கிறோம்.

கேள்வி: மொழிகள் ஆணைக்குழு பலமான வகையில் தொழிற்படக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட ஒரு அதிகார சபையாக இருக்க வேண்டும், என்றும் அந்த பரிந்துரைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தெரிவது என்னவெனில் இதுவரை ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரங்கள் குறைவாக இருக்கின்றன என்று அர்த்தமா? இல்லாவிட்டால் ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரங்கள் பற்றி உங்களது விளக்கம் என்ன?

பதில்: இங்கு அவர்கள் அதிகாரங்கள் என்று குறிப்பிடும் விடயங்களை தீர்மானிக்காமல் அதுபற்றி சரியான ஒரு விளக்கத்தைக் கொடுப்பது கடினமானது. தற்போது கூட அரச நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அரச நிறுவனத்திலும் மொழிக் கொள்கை தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளைப் பரீட்சிக்கும் அதிகாரம் ஆணைக் குழுவுக்குரியது. அம்முறைபாடுகளைப் பரிசீலிக்கும் போது எந்த அரச நிறுவனத்துக்குரிய எழுத்து மூலங்களைக் வரவழைத்து பரிசீலனை செய்யும் அதிகாரமும் ஆணைக்குழுவுக்குரியது.

அவ்வாறு பரிசீலனை செய்த பின்பு நாம் பெற்றுக் கொடுக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அந்த அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டுள்ளன. எந்த ஒரு நிறுவனமும் அதற் கெதிரான வகையில் செயற்பட்டால் ஆணைக்குழுவுள்ள அதிகாரங்களின் படி அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரும் அதிகாரம் அரச ஆணையாளருக்கு அல்லது அவ் விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்த ஆளுக்கு உண்டு.

இதன்படி அரச கரும மொழிகள் ஆணைக்குழு என்பது இப்போதைக்கு போதிய அதிகாரங்களுள்ள ஒரு நறுவனமாகும். இங்கு மேலும் அதிகாரமுள்ள ஒரு அதிகார சபையாக நியமிப்பது பற்றி நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு எவ்வாறான ஒரு கருத்தை முன் வைத்தார்கள் என்பது தெளிவாக இல்லை. சில சமயம் சுங்கமும் தொழிலாளர் திணைக்களம் போன்ற குறைவான நீதித்துறை அதிகாரங்களுள்ள நிறுவனமாக நியமிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரி வித்திருக்கலாம். எவ்வாறெனினும் நீதிமன்ற நடைமுறைகளை மென்மேலும் இலகுவாக்கும் வகையில் ஆணைக் குழுவை அதற்கு மேலும் பலம் வாய்ந்ததாக உருவாக்குவதாக இருந்தால் அதிக செல்வாக்கைச் செலுத்தும் இயலுமை ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும். எவ்வாறெனினும் தண்டனை வழங்குவதை விட முக்கியமானது மனப்பாங்குகளில் ஒரு மாற்றம் தான் என்பதை இங்கு அவதானிக்க வேண்டியுள்ளது.

கேள்வி: இப்போது ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரங்கள், கடமைகள் மற்றும் விடயங்களின் எல்லைகள் பற்றி சுருக்கமான ஒரு அறிமுகத்தை கூற முடியுமா?

பதில்: அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் முக்கிய கடமை இந்நாட்டின் சகல அரச நிறுவனங்க ளிலும் சிங்கள, தமிழ் மக்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்து வதும் அவ்வுரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் பிழைகளை சரிப் படுத்திக் கொள்ள தேவையான குறுகிய கால, மத்திய கால, மத்திய கால, நீண்ட கால பரிந்துரைகளை முன் வைப்பதுமாகும்.

பொறுப்புடைய ஒரு நிறுவனம் அந்த பரிந்துரைகளை கவனிக்காது விட்டால் அதற்கெதிராக நீதிமன்ற நடவடிக் கைகளை எடுக்கும் அதிகாரம் அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு அல்லது அவ்வாறில்லாவிட்டால் அம் முறைப்பாட்டைத் தாக்கல் செய்த முறைப்பாட்டாளருக்கும் கிடைக்கும். பொது மக்களுக்கு அவ்வதிகாரத்தைப் பெற் றுக் கொடுப்பதன் மூலம் தெளிவாகுவது என்னவெனில் 1991 இலக்க 18 வது அரச கரும மொழிகள் ஆணைக்குழு சட்டம் இந்நாட்டு பிரஜைகளின் மொழி உரிமையை பாது காப்பதற்காக நேரடியாகவே முன் நிற்கின்றது என்பதாகும்.

பொதுவாக எடுத்துக் கொண்டால் மொழிக் கொள்கையை மேற்பார்வை செய்வது, தேவையான இடங்களில் முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட இந்நாட்டின் மொழி உரிமையை உறுதிப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளவிடயங்களாகும்.

அதனடிப்படையில் மொழியுரிமை தொடர்பாக முறைப்பாடுகளை பரிசீலனை செய்வது, தேவையான பரிந்துரைகளை வெளியிடுவது தற்போது இருக்கும் நிலைமைகளைப் பற்றி ஆய்வுகள் நடத்துவது மொழி கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதிகாரிகள் அறிவூட்டுவது, பயிற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல தொழிற்பாடுகள் இப்போதைக்கும் நட ந்து கொண்டு தான் இருக்கின்றது. மொழிக் கொள்கையை சரியான முறையில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

கேள்வி: மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் விசேட ஈடுபாட்டைக் காட்டினாலும் அரச நிறுவனங்களில் காணப்படும் வசதிகளும் வளங்களும் அதற்குப் போதுமானதாக இருக்கின்றதா? அவ்வாறு போதுமானதாக இன்மையால் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அது தடையாக இருக்காதா?

பதில்: இக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது நிறுவனங்களோடிணைந்த கொள்கையாக அன்றி மக்களோடு இணைந்த கொள்கையாக அல்ல. அதன்படி அரச நிறுவனமொன்றில் வேலை செய்யும் அனைவரும் இரு மொழிகளிலும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு நிறுவனம் தமது நிறுவனத்திலுள்ள சிங்கள, தமிழ் மொழிகளில் திறமையுள்ள உத்தியோகத்தர்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொண்டு அந்நிறுவனத்துக்கு வரும் பொது மக்களின் தேவைகளை அவர்களின் மொழிகளைப் பயன்படுத்தி செய்து கொடுப்பதால் அங்கு அரச கரும மொழிக் கொள்கை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என ஏற்றுக் கொள்ளலாம்.

வேறுவகையில் கூறுவதானால் அரச கரும மொழிக் கொள்கை 100 வீதம் நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்களுக்குள்ள மும்மொழி அறிவு 100 வீதமே தேவையில்லை. நிறுவனத்தின் பெயர்ப்பலகைகள், மாதிரிப் படிவங்கள், அறிவித்தல்கள், போன்ற எழுத்து மூலங்கள் மும் மொழிகளினாலும் நடைமுறைப்படுத்திச் செல்வதால் இத்தேவையை பெருமளவில் நிறைவேற்றலாம்.

ஒரு நிறுவனத்துக்கு இந்த எழுத்து மூலங்கள் பற்றி மொழிபெயர்ப்புத் தேவை ஏற்பட்டால் அதற்காக அரச கரும மொழிகள் திணைக்களத்துக்குரிய மொழிபெயர்ப் பாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த செல்லும் போது அரச நிறுவனங்களிலுள்ள வளங்கள், வசதிகள் பற்றி பெருமளவு சிக்கல்கள் எழுவதில்லை.

கேள்வி: யுத்த நிலைமை முடிவுற்றதன் பின் புதியதோர் அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மொழிக் கொள்கைக்கேற்ப அத்தேவையின் முக்கியத்துவமும் இச்சந்தர்ப்பத்தினால் பெற்றுக் கொள்ளக் கூடிய உபயோகங்கள் பற்றியும் உங்களது விளக்கம் என்ன?

பதில்: யுத்தத்தினால் இந்நாட்டு மக்கள் சொல்ல முடியாதளவிற்கு துன்பங்களை அனுபவித்தது போல் பல பாடங்களையும் கற்றுக் கொண்டனர். அதில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் மீண்டும் அத்தகைய ஒரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பது தான். அதற்காக இந்நாட்டின் சகல இனக்குழுக்களுக்குமிடையில் நிரந்தர சமாதானத்துக்கு அத்திவாரம் இடப்பட வேண்டும். அத்தகைய ஒரு சமாதானத்தின் முக்கிய அம்சங்களாக சமத்துவம், ஒவ்வொருவருக்குமிடையிலாக அந்நியோன்ய புரிந்துணர்வு மற்றும் ஏனையவர்களை மதிப்பதுமாகும்.

இந்த அனைத்து காரணங்களையும் பூரணப்படுத்திக் கொள்ள இந்நாட்டின் மும்மொழிக் கொள்கைக்கு அது தொடர்பாக பெரியதோர் பொறுப்பினை செய்யலாம்.

எனவே இன்று என்றுமில்லாதவாறு இந்நாட்டின் பொது மக்கள் மும்மொழிக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொண்டுள்ளனர். இந்நாட்டில் பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களும் மக்களும் இன்று அதற்காக செயற்பாட்டோடு இருப்பதை நாம் காணலாம்.

கேள்வி: இந்த சந்தர்ப்பத்தில் அதற்கேற்ற பலனைப் பெற் றுக்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட நிகழ்ச் சித் திட்டங்கள் பற்றி ஏதாவது உங்களால் கூற முடியுமா?

பதில்: தேசிய ரீதியில் பார்க்கும் போது முன்னர் குறிப்பிட்ட 2012 மும்மொழி வருடமென்று பெயரிடுவதும் மும்மொழி நூற்றாண்டு என்று பெயரிட்டதும் இங்கு அடையாளப்படுத்திக் கூறக்கூடிய முக்கிய நிகழ்ச்சியாகும். அரசின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி இந்த நட வடிக்கை தொடர்பாக நேரடியாகவே ஈடுபட்டு இருப்பதைப் பார்க்கும் போது அரசாங்கம் இது தொடர்பாக பெற்றுக் கொடுத்துள்ள முன்னுரிமை தெளிவாகின்றது. இது தவிர அரச கரும மொழிகள் ஆணைக்குழு நாடு முழுவ தும் பல அரச நிறுவனங்களிலுள்ள அதிகாரிகளை அறி வூட்டி அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த உள்ள தடைகளைப் பற்றிய விடயங்களை கண்டுபிடித்து அப்பிரச்சினைகளைத் தீர்க்க பலவித நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றது. மாவட்ட மட்டத்தில் பல நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பொதுவான முடிவுகளை ஒழுங்கமைத்து இந்நாட்டினுள் மும்மொழிகளின் பாவனையை உயர் மட்டத்துக்கு கொண்டு செல்ல தேவையான பொது பரிந்துரைகளை இப்போதைக்கு ஒழுங்கமைத்துக் கொண்டு இருக்கின்றது.

இப்போதைக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற மாவட்டங்களில் சுமார் 70 நிறுவனங்களும் திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் 70 நிறுவனங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு முற்றுப் பெற்றுள்ளது. அது தவிர அரச கரும மொழிகளை நடைமுறைப்படுத்தும் போது சில நிறுவனங்கள் முகங் கொடுக்கும் மொழி தொடர்பான பிரச்சினைகளை தீர்த் துக்கொள்ளத் தேவையான பயிற்சியைப் பெற்றுக் கொடு க்கும் நடவடிக்கை கூட நாம் மேற் கொண்டு வருகிறோம். உதாரணமாக கடந்த தினங்களில் புகையிரதத் திணைக்களத்தின் ஒலி மூல அறிவித்தல்களை மும் மொழிகளிலும் மேற் கொள்ள தேவையான பயிற்சியினை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கைகளை மேற் கொண்டோம். இந்த அனைத்து தொழிற்பாடுகளுக்கிடையே மொழி உரிமை மீறல்கள் தொடர்பாக நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு பிரஜையினாலும் பெற்றுக் கொள்ளளப்படும் முறையீடுகளை பரிசீலித்து தீர்வுகளைப் பெற்றுக் கொடு க்கும் வேலைத்திட்டமொன்று நாம் மிக வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எழுத்து மூலமும் அவசர தொலைபேசி இலக்கம் 0112878687 மூலமும் மொழி உரிமை மீறல் தொடர்பான இத்தகைய முறைப்பாடுகள் இருப்பின் எந்த ஒரு பிரஜைக்கும் முன்வைக்கலாம். அது தொடர்பாக துரித நடவடிக்கைகளை எடுக்க நாம் எப்போதும் ஆத்தமாக இருக்கிறோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.