ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

இஸ்ரேலில் கல்லெறிபவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

இஸ்ரேலில் கல்லெறிபவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ஓடும் வாகனங்களு க்கு கல் எறிந்தால் கடும் தண்டனை வழங்கும் சட் டத்திற்கு இஸ்ரேல் பாரா ளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

பலஸ்தீன ஆர்ப்பாட் டக்காரர்களை இலக்கு வைத்து கொண்டுவரப் பட்டிருக்கும் இந்த சட் டம் கடந்த திங்களன்று இஸ்ரேல் பாராளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்தின்படி கல்லெறிபவர் 10 ஆண்டு வரை சிறை அனுபவிக்கவேண்டி வரும் என்பதோடு இந்த தாக்குதலால் வாகனத் திற்கு மோசமாக சேதம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் 20 ஆண்டு வரை சிறை அனுபவிக்க வேண்டிவரும்.

இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்த நிஸ்ஸான் ஸ்லோ மனிஸ்கி, கல்லெறிந்த குற்றச்சாட்டிலேயே nஜரூசலத்தில்; மூன்றில் இரண்டு வீதமானவர்கள் கைதாகின்றனர் என்றார். இது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற் படுத்தும் நடவடிக்கை என்றும் அதனை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்தார்.

எனினும் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இருக்கும் அரபு உறுப்பினர் ஜமால் சஹ்லக் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அத்துமீறல்களுக்கு பதிலடியாகவே கல் எறியப்படுவதா கவும் குறிப்பிட்டார். 'அநீதிக்கு உள்ளானவரை நீங்கள் தண்டிக்கிறீர்கள்" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி