ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

புளுட்டோவில் மற்றொரு மலைத்தொடர்

புளுட்டோவில் மற்றொரு மலைத்தொடர்

நாசாவின் நியு ஹொரைசன்ஸ் விண்கலம் அனுப்பியுள்ள ஒரு படத்தில் புளுட்டோவின் இதயம் போன்ற பகுதியில் உள்ள இன்னொரு மலைத் தொடர் அடையாளம் காணப்பட்டுள் ளது. ஏற்கனவே ஒரு மலைத் தொடர் அடை யாளம் காணப்பட்ட நிலையில் இது 2ஆவது மலைத் தொடராகும்.

நன்கு பிரகாசமாக இந்த மலைத் தொடர் தெரிகிறது. புளுட்டோவின் இடது புறம் கீழே இந்த மலைப்பகுதி உள்ளது. அதிகம் உயரம் கொண்டதாக இந்த மலைத் தொடர் இல்லை. புளுட்டோவின் தென் மேற்கில் உள்ள டோம் பாக் ரெஜpயோ என்ற பகுதியில் இந்த மலைத் தொடர் காணப்பட்டுள்ளது.

இதுவும் பனி மலை என்பதோடு இதன் உய ரம் 1.5 கிலோமீற்றர் என்று தெரிய வந்துள் ளது. அமெரிக்காவில் உள்ள அப்பாலச்சி யான் மலைத் தொடர் அளவாகும்.

புளுட்டோவல் உள்ள இதயம் போன்ற பகு திக்கு ஸ்புட்னிக் பிளானம் என்று பெயரிட் டுள்ளனர். பிளானம் என்பது சமவெளியாகும். இங்குதான் இந்த மலைத் தொடர் உள்ளது.

பனி சு+ழ்ந்த நார்கே மாண்டிஸ் என்ற மலைத் தொடருக்கு 110 கிலோமீற்றர் வட மேற்கில் இந்த புதிய மலைத் தொடர் உள் ளது. மிகவும் அழகிய மலைத் தொடராக இது இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறி யுள்ளனர். இந்த மலையும் மற்றவை போலவே இளமையாக உள்ளது.

புதிதாக உருவானது போல பனி படர்ந்து காணப்படுகிறது. மிகவும் உருகிப் போன நிலையில் இங்கு பனிகள் உள்ளன.

இதயம் போன்ற புளுட்டோவின் இந்தப் பகு தியில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின் றன. அங்கு என்னவெல்லாம் உள்ளன என் பதை அறிய முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தப் பகுதியானது கிட்டத்தட்ட 100 மில்லி யன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி