ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை இடைநிறுத்தம்

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை இடைநிறுத்தம்

மதநிந்தனை குற்றத்துக் காக ஒரு கிறிஸ்தவ பெண் ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இடைநிறுத் திய பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் அவரது மேன்முறை யீட்டு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

முஹமது நபியை நிந்தித் ததற்காக 5 வருடங்களுக்கு முன்னதாக ஆசியா பிபி என் னும் அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், தன் மீது குற்றஞ்சாட்டிய முஸ்லிம் பெண் தன்னுடன் கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக செயற்பட்டதாக கூறியுள் ளார்.

பஞ்சாப் மாகாண உயர் நீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, அவரது சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் மேன்முறை யீட்டை கடந்த நவம்பரில் தாக்கல் செய்திருந்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி