ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர் தாக்குதலுக்கு மத்தியில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் மோதல்

ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர் தாக்குதலுக்கு மத்தியில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் மோதல்

தலைநகரில் இராணுவத்தினர் குவிப்பு

ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் அந்நாட்டில் அரசியல் பதற்றமும் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நூரி மலிக்கி ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறி செயற்படுவதாக குற்றம் சுமத்தியிருப்பதோடு தலைநகர் பக்தாதில் தனக்கு ஆதரவான இராணுவத்தையும் குவித்துள்ளார்.

ஈராக் பாராளுமன்றம் தம்மை மூன்றாவது தவணைக்கு பிரதமர் பதவிக்கு தேர்வு செய்ய தவறிய நிலையில் ஜனாதிபதி புவாத் மசூம் தலையிடாதது குறித்து நூரி மலிக்கி தேசிய தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய விசேட உரையில் குற்றம் சுமத்தினார்.

வடக்கு ஈராக்கில் ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் நிலையில் மலிக ;கியை பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி அழுத்தங்கள் அதி கரித்து வருகின்றன.

அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அரசொன்றை அமைக் கும்படி அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்திருப்பதோடு ஈராக் ஜனா திபதிக்கும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

எனினும் மலிக்கி தொலைக்காட்சியில் விசேட உரை நிகழ்த்தும் முன்னர் பக்தாத் எங்கும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எந்த வன்முறையும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மலிக்கியின் கூட்டணி அதிக ஆசனங்களை வென்றபோதும் அவர் மூன்றாவது தவணைக்கு பதவியேற்க பாராளுமன்றம் இன்னும் இணக்கம் வெளியிடவில்லை. இந்நிலையில் பாராளுமன்றத்தில் அதிக ஆசனங் களை வென்ற கூட்டணிக்கு பிரதமரை பெயரிடக் கோரும் காலக் கெடுவை நீடித்தது மற்றும் அந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க கோராதது என்று ஜனாதிபதி அரசியலமைப்பை இரு முறை மீறி இருப்பதாக மலிக்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் மலிக்கி ஜனாதிபதிக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "இது நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் செயற்பாட்டை கவிழ்க்கும் நடவடிக்கை யாகும். ஜனாதிபதி திட்டமிட்டு அரசியலமைப்பை மீறியிருப்பது நாட்டின் ஐக்கியம், இறைமை மற்றும் சுதந்திரத்திற்கு பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடியது" என்று பிரதமர் மலிக்கி தனது தொலைக்காட்சி உரையில் நாட்டு மக்களை எச்சரித்தார்.

ஈராக்கின் தற்போதைய பிரச்சினைக்கு மலிக்கியின் மதப்பாகுபாட்டு 'pயா அரசே காரணமாகும் என்று அவரை விமர்சிப்போர் குற்றம் சுமத்துகின்றனர். மலிக்கியை பதவி விலகும்படி நாட்டின் சுன்னி, குர்திஷ் சிறுபான்மையினருடன் பெரும்பான்மை 'pயா தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கில் ஐக்கிய அரசொன்றை அமைக்க மேற்குலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

மறுபுறத்தில் இஸ்லாமிய ஆயுததாரிகளை வீழ்த்த ஈராக் குர்திஷ் கள் சர்வதேச இராணுவ உதவியை கோரியுள்ளனர். ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்திய தலைநகருக்கு அருகில் நிலைகொண் டிருக்கும் ஐசிஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே நான்கு சுற்று வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த வான் தாக்குதல்களின் உதவியோடு குர்திஷ் போராளிகள் ஒரு சில பகுதிகளை மீட்டதாக குர்திஷ் அதிகாரி ஒருவர் குறிப் பிட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி